அட.. BEAST & VIKRAM சண்டைக் காட்சிகள் பிண்ணனியில் இப்படி ஒன்னு இருக்கா? - அன்பறிவ் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, கார்த்தியை வைத்து 'கைதி' படத்தினை இயக்கி இருந்த லோகேஷ், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தையும் கடைசியாக இயக்கி இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, நடிகர் கமல்ஹாசனை வைத்து, 'விக்ரம்' என்னும் திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால், இந்த காம்போவை திரையில் காண வேண்டியே ரசிகர்கள் அனைவரும் உச்சகட்ட ஆவலில் உள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ளார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு பிசியாக செயல்பட்டு வருகிறது.

விக்ரம் திரைப்படம், ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால், விரைவில் திரைப்படத்தின் பாடல் மற்றும் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் விக்ரம் படத்தின் சண்டைக்காட்சி இயக்குனர்கள் அன்பறிவ் நமது BEHINDWOODS சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அதில், பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சியும், விக்ரம் படத்தின் சண்டைக்காட்சியின் அமைப்பும் ஒருங்கே அமைந்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தனர். பீஸ்ட் படத்தில் மாலின் கதவு பயன்படுத்தியதாகவும், அதன் பின் விக்ரம் படத்திலும் அதே சூழலில் ஜெயில் கதவு பயன்படுத்தியதாகவும் கூறினர். ஆனால் இரண்டு படத்தின் காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது விக்ரம் படம் வந்தால் தெரிந்துவிடும் என்று கூறினர். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற காட்சியின் அளவு சிறியது என்றும் டிரெய்லரில் இந்த காட்சிகள் வந்துவிட்டதால் ரசிகர்கள் ஒப்பிட்டுவிட்டனர் என்று  கூறினர்.

90% கதைக்கும் கதைக்களத்திற்கும் ஏற்றவாறே சண்டைக்காட்சிகள் அமைப்பதாக கூறினர். கமல்ஹாசன் ஒரு லெஜண்ட் என்றும், அவருக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பேசியுள்ளனர். மேலும் பீஸ்ட், விக்ரம், KGF, KGF Chapter 2, சார்ப்பட்டா பரம்பரை படங்களின் சண்டைக்காட்சிகள் குறித்தும் மெட்ராஸ் படத்தின் முக்கிய காட்சிகள் குறித்தும் விரிவான பேட்டி அளித்துள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.


https://www.behindwoods.com/bgm8/

அட.. BEAST & VIKRAM சண்டைக் காட்சிகள் பிண்ணனியில் இப்படி ஒன்னு இருக்கா? - அன்பறிவ் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anbariv Masters about Vikram Beast Movie Fight Sequence

People looking for online information on பீஸ்ட், Beast, Kamal, Kamal Haasan, Vikram will find this news story useful.