விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER படத்தின் ரிலீஸ்.. அனன்யா பாண்டே நடத்திய போட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லைகர் படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகை அனன்யா பாண்டே புதிய போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலில் நடிகை தமன்னா.. அரளிப்பூ, தேங்காய் சாற்றி வழிபாடு!

இந்த அதிரடி ஆக்சன்  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக நடித்துள்ளார். பிரபல உலக குத்துசண்டை வீரர்  மைக் டைசன் இந்தியத் திரையில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

லைகர் திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில்  ஆகஸ்ட் 25, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு படக்குழு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே படத்தின் ப்ரோமோஷனுக்கு புதிய போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார். டெனிம் ஜீன்ஸ் அணிந்து அனன்யா பாண்டே இந்த போட்டோ ஷூட்டில் ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகர்  ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டூடியோ 9 நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த லைகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படம் ஏற்கனவே சென்சாராகி உள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும்  படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் முதல் பாதி 1 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் என்றும், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தில் 7 சண்டை காட்சிகளும் 6 பாடல் காட்சிகளும் உள்ளன என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | AK61 ஷூட்டிங்கில் அஜித்தை சந்தித்த ரசிகை.. அந்த நாளை மறக்காமல் இருக்க செய்த செயல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ananya Panday Latest Photoshoot for Vijay Devarakonda LIGER Movie Release

People looking for online information on Ananya Panday, Ananya Panday Latest Photoshoot, LIGER Movie Release, Vijay Deverakonda will find this news story useful.