கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் நெகிழ்ச்சியான டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”  படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா  ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன்,  சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைபடம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து வீடுகட்டும் நிகழ்வை கதைக்களமாக கொண்டு இந்தப்படம் உருவாகி உள்ளது போல டீசரில் தெரிகிறது.

குடும்ப உறவுகளின் மேன்மையை இயக்குனர் நந்தா பெரியசாமி உணர்ச்சிமிக்க வடிவில் டீசரில் கொடுத்துள்ளார். 

கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் நெகிழ்ச்சியான டீசர்! வீடியோ

Anandham vilaiyadum veedu movie teaser released

People looking for online information on Cheran, Gowtham Karthik will find this news story useful.