"என் அன்பனுக்கு.." மறைந்த கணவர் பிறந்தநாளை உருக்கத்துடன் கொண்டாடிய ஆனந்த கண்ணன் 'மனைவி'..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1990 காலகட்டத்தில் பிறந்தவர்களை 90 ஸ் கிட்ஸ் என்ற பெயரில் அதிகம் ட்ரோல் செய்து வந்தாலும், அவர்கள் சிறு வயதில் அனுபவித்த பொற்காலத்தை வேறு எந்த ஒரு கிட்ஸ்ஸும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

Advertising
>
Advertising

அவர்களின் குழந்தை காலங்களில், பல விளையாட்டுகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வந்தனர்.

அந்த வகையில், டிவி நிகழ்ச்சிகள் மூலம், பல பிரபலங்கள் நன்கு பரிச்சயம் ஆகி இருந்தாலும், பலரின் பேவரைட் ஆக இருந்தவர் ஆனந்த கண்ணன் தான். பல 90 ஸ் கிட்ஸ்களின் விருப்பமான டிவி தொகுப்பாளராகி இருந்த ஆனந்த கண்ணன், சன் மியூசிக் தொடங்கிய காலகட்டத்தில் அதில் தொகுப்பாளராக இருந்தவர்.

திடீர் மறைவு

இதன் பின்னர், சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ள ஆனந்த கண்ணன், சினிமா பக்கமும் தலை காட்டி இருந்தார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆனந்த கண்ணன், அதற்கு வேண்டி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். தன்னுடைய 48 ஆவது வயதிலேயே இப்படி ஒரு முடிவு நேர்ந்ததை எண்ணி, அவரது ரசிகர்கல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

மனைவியின் உருக்கமான போஸ்ட்

அதே போல, பல சினிமா பிரபலங்களும், ஆனந்த கண்ணன் மறைவுக்கு மிகவும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஆனந்த கண்ணன் மறைந்து, சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, அவரது பிறந்தநாள் தினமான இன்று, அவரின் மனைவி ராணி கண்ணா போட்டுள்ள இன்ஸ்டா பதிவு, மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

கணவரின் மறைவுக்கு பிறகு, அவரின் முதல் பிறந்தநாள் தினமான இன்று, கையில் கேக்குடன் இருக்கும் ஆனந்த கண்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, "Happy Birthday to my love!. எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல், கடந்த ஒரு மாதத்திற்கு முன், தங்களுடைய திருமண நாள் வந்த போதும், கடந்த ஆண்டு திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து, "நீங்கள் விட்டுச் சென்ற காதலில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

ஆதரவளிக்கும் ரசிகர்கள்

ஆனந்த கண்ணாவின் மறைவு, அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து கூட இன்னும் மறைந்து போகாத நிலையில், அவரது மனைவியால் கூட, நிச்சயம் கணவரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 

அதே போல, ஆனந்த கண்ணன் மறைந்த பிறகு வரும் ஒவ்வொரு ஸ்பெஷல் தினத்தன்றும் கணவரை நினைத்து உருகும் மனைவி ராணி கண்ணாவுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களைக் கூறி, முழு ஆதரவினையும் அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

"என் அன்பனுக்கு.." மறைந்த கணவர் பிறந்தநாளை உருக்கத்துடன் கொண்டாடிய ஆனந்த கண்ணன் 'மனைவி'.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anandha kanna wife rani celebrates her husband birthday

People looking for online information on Anandha Kannan, Birthday, Emotional, Rani Kanna will find this news story useful.