2000-ஆம் வருடத்தின் தொடக்கத்தில் சன் மியூசிக் மியூசிக் சேனலில் பிரபல வீடியோ ஜாக்கியாக அறியப்பட்டவர் ஆனந்த கண்ணன்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக 2011-ஆம் ஆண்டு வரை சென்னையில் தங்கியிருந்து பல்வேறு சேனல்களில் விஜேவாக பணியாற்றியதுடன், ஆனந்த கண்ணன் சன் டிவியில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நடித்திருந்தார்.
இதேபோல் மேடை நாடகங்கள், கூத்துப்பட்டறை, தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் பணியாற்றியதுடன் பலருக்கும் உதவி செய்துள்ள ஆனந்த கண்ணன், சிரித்த முகத்துடன் அனைவருடனும் பழக கூடியவர். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு தன் மனைவி ராணியுடன் மீண்டும் சிங்கப்பூரில் குடியேறி வாழ்ந்து வந்தார் இந்த சிங்கப்பூர் தமிழர்.
இதனிடையே ஆனந்தக் கண்ணனுக்கு கேன்சர் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. இந்நிலையில் ஆனந்த கண்ணன் அவருடைய மனைவியுடன் வெளிநாட்டில் சுவிட்சர்லாந்துக்கு செல்லும் போது எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ஆடு தொடர்பான நீதி கதையை பேசியும் பாடியும் ஆனந்த கண்ணனின் மனைவி ராணி அசத்துகிறார். பின்னர் இருவரும் அதில் ‘விரைவில் தமிழ்நாட்டுக்கு’ வருவதாக கூறுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.