"இத எப்படி நான் மிஸ் பண்ணேன்?!".. மகேஷ் பாபு குறித்து ஆனந்த் மஹிந்திரா செய்த 'வைரல்' ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, நடிகர் மகேஷ் பாபு திரைப்படம் குறித்து செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "Fun நானி, Cute நஸ்ரியா.." அடடே சுந்தரா படத்தின் டிரைலர் எப்போ?.. Glimpse வீடியோவுடன் வெளியான 'Update'

மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய தொழிலில் அதிக அளவில் ஈடுபாடுடன் இருப்பது போல, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிகம் ஆக்டிவாக இயங்கக் கூடியவர்.

ஒவ்வொரு நாளும், இணையத்தில் தான் சந்திக்கும் வினோதமான நிகழ்வுகள் குறித்தும், ஏராளாமான திறமைகள் கொண்ட மக்களின் செயல்பாடுகள் குறித்தும், மற்றவர்களுக்கு பயன்படும் பல விஷயங்களை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் 'செம' ஆக்டிவ்

அது மட்டுமில்லாமல், மிக திறைமையானவர்களை பாராட்டுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கவும் ஆனந்த் மஹிந்திரா தவறுவதில்லை. சமீபத்தில், தமிழ் வார்த்தைகளை கொண்டு, தமிழக இளைஞர்  ஒருவர் ஆனந்த் மஹிந்திராவின் படத்தை வரைந்திருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, வியந்து போய், இளைஞரை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

சர்க்காரு வாரி பாட்டா

இந்நிலையில், தற்போது மகேஷ் பாபு திரைப்படம் குறித்து, ஆனந்த் மஹிந்திரா செய்துள்ள ட்வீட் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நடித்து கடந்த மே 12 ஆம் தேதி, 'சர்க்காரு வாரி பாட்டா' என்னும் திரைப்படம் வெளியாகி இருந்தது. பரசுராம் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மக்கள் மத்தியிலும், சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

"எப்படி இத மிஸ் பண்ணேன்?"

இந்த படத்தில் ஜாவா பைக்கில் மகேஷ் பாபு வரும் வீடியோ ஒன்றை, அனுபம் தரேஜா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை கவனித்த ஆனந்த் மஹிந்திரா, தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "எப்படி மகேஷ் பாபு மற்றும் ஜாவாவின் காம்பினேஷனை நான் பார்க்க தவறினேன். நான் இப்போது நியூயார்க்கில் இருக்கிறேன். இந்த படம் திரையிடப்படும் நியூ ஜெர்சிக்கு சென்று பார்ப்பேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மகேஷ் பாபு மற்றும் ஜாவா பைக் குறித்து, ஆனந்த் மஹிந்திரா செய்துள்ள ட்வீட் குறித்து, நெட்டிசன்கள் அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

Also Read | பாடிக் கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து.. உயிரிழந்த பிரபல பாடகர்..

 

தொடர்புடைய இணைப்புகள்

Anand Mahindra tweets about mahesh babu movie

People looking for online information on Anand Mahindra, Anand Mahindra tweets, Mahesh Babu, Mahesh babu movie will find this news story useful.