'96' கௌரி கிஷன் மற்றும் 'டிக்கிலோனா' அனகா நடிப்பில் வெளியான LGBTQ பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் சேதுபதி நடித்த '96' படம் மூலம் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இதேபோல் நடிகர் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனகா.

Advertising
>
Advertising

இவர்கள் இருவரும் இணைந்து தன்பாலின காதல் புரியும் இரு பெண்கள் குறித்த பாடலில் நடித்திருக்கின்றனர். இந்த பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலுக்கு 96 திரைப்பட இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார்.

கீர்த்தனா வைத்தியநாதன் இந்த பாடலை பாடியிருக்கிறார். ஒரு நாட்டியப் பள்ளியில் சந்தித்து தன்பாலின இணையரை கண்டுணர்ந்து காதலில் விழுகின்றனர்.

பின்னர் இவர்கள் இருவரும் வீடு, சமுதாய மற்றும் குடும்ப அமைப்பு உள்ளிட்டவற்றை உடைத்து அதிலிருந்து வெளியேறி சுயமான மற்றும் சுதந்திரமான வாழ்வைத் தொடங்கும் வரை இந்த கதை காட்டப்படுகிறது. 

மகிழினி என பெயரிடப்பட்ட இந்த தனி ஆல்பம் பாடலை VG பாலசுப்ரமணியன் இயக்கியிருக்கிறார். விஷ்வாகிரண் நம்பி இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

Anagha and Gouri Kishan Starring Magizhini LGBTQ Song Out

People looking for online information on Anagha Maruthora, Gouri Kishan, Lgbtq, Magizhini will find this news story useful.