நடிகை மர்லின் மன்றோவின் BIO PIC.. ANA DE ARMAS நடிப்பில் வெளியான அசரவைக்கும் டீசர்! பட ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்க நடிகை மர்லின் மன்றோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட Blonde படத்தின் முதல் டீசர் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ரஜினி - நெல்சன் இணையும் புதிய படம்.. மிரட்டலான டைட்டிலுடன் வெளியான மாஸ் போஸ்டர்! போடு வெடிய

அனா டி அர்மாஸ் முக்கிய பாத்திரத்தில் மர்லின் மன்றோவாக நடித்துள்ளார், டீஸரில் மர்லினின் வாழ்வில் நடந்த மிகச் சிறந்த சம்பவங்கள் மற்றும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன.  "டயமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்ஸ் பெஸ்ட் ஃப்ரெண்ட் (“Diamonds Are a Girl’s Best Friend”) " பாடல் டீஸருடன் வருகிறது.

ஜாய்ஸ் கரோல் ஓட்ஸின் Blonde  நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை ஆண்ட்ரூ டொமினிக் இயக்கியுள்ளார். Blonde படத்தின் சுருக்க கதையாக, “இந்தத் திரைப்படம் ஹாலிவுட்டின் ஐகான்களில் ஒருவரான மர்லின் மன்றோவின் வாழ்க்கையை தைரியமாக மறுவடிவமைக்கிறது." என கூறப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் 23 அன்று Netflix இல் வெளியாகிறது.

இப்படத்தில் அட்ரியன் ப்ராடி, பாபி கன்னாவல், இவான் வில்லியம்ஸ், ஜூலியான் நிக்கல்சன், சேவியர் சாமுவேல், ஸ்கூட் மெக்நெய்ரி, கேரட் டில்லாஹன்ட் மற்றும் லூசி டிவிட்டோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ப்ளாண்ட் படத்தை பிராட் பிட், டெடே கார்ட்னர், ஜெர்மி க்ளீனர், டிரேசி லாண்டன் மற்றும் ஸ்காட் ராபர்ட்சன் ஆகியோரால் நெட்பிளிக்ஸ்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிறிஸ்டினா ஓ நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். 2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக Blonde இருக்கும்.

Also Read | கமல் நடித்த விக்ரம் படத்தின் தமிழக வசூல்.. முதல் முறையாக மனம் திறந்த உதயநிதி ஸ்டாலின்!

நடிகை மர்லின் மன்றோவின் BIO PIC.. ANA DE ARMAS நடிப்பில் வெளியான அசரவைக்கும் டீசர்! பட ரிலீஸ் எப்போ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ana de Armas is Marilyn Monroe in Blonde only on Netflix September 23.

People looking for online information on Ana de Armas, அனா டி அர்மாஸ், மர்லின் மன்றோ, Blonde, Marilyn Monroe, Netflix will find this news story useful.