BIGG BOSS 6 TAMIL : "இந்த நடிப்பெல்லாம் சீரியல்ல வெச்சுக்க".. சீறிய அசீம்.. சீரியஸாக பேசிய அமுதவாணன்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : தடுத்து நின்ற தனலட்சுமி.. இடித்து தள்ளி உள்ளே போன அசீம்.. Doll Task-ல் அடுத்த சம்பவம்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும்.

இதில் பொம்மையை எடுத்துக்கொண்டு ஷெரினா வெளியேற முற்படும்போது இரண்டு விதமான அணிகளும் மோதிக்கொண்டதை அடுத்து, அப்பொழுது ஷெரினா நிலை தவறி கீழே விழுகிறார். அவரை சுற்றி ஹவுஸ்மேட்ஸ் நெரித்ததால் இந்த நிலை உண்டானது. இதனால் ஷெரினாவின் தலையில் அடிபட்டது. பின்னர் அசீம் தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது கோபமாக வந்து தனலட்சுமி பற்றி பேசும் அசீம்,“அறிவு இருக்கா? பெர்சனல் வெஞ்சன்ஸை இந்த வீட்ல காட்டாத.. நிவாஷினியையும் ஷெரினாவையும் அப்படி பிடிச்சு தள்ளிவிடுற? சொல்றேன்.. எவ்ளோ கூலா நிக்குறா பாரு... கொஞ்சமாச்சும் மனித நேயம் இருக்கணும்.. இவ்வளவு தூரம் சொல்றோம்.. எப்படி நிக்குறா.. நடக்குறா பாரு (தனலட்சுமி அங்கும்ங்குமாக பேசாமல் நடந்துகொண்டிருந்தார்.) கேம்னா ஒருவரை கொன்றுவாங்களா?” என வெடிக்கிறார்.

ஷெரினா தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்ததை அடுத்து, உடல்நிலையால் அவஸ்தை பட்டு உடனடியாக மருத்துவ முதலுதவிக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதன் பிறகு அவரிடம் பேசிய பிக் பாஸ் இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு இப்போது பரவாயில்லை பிக் பாஸ் என்று ஷெரினா கூறினார். எனினும் உடலில் வலி இருப்பதாகவும் ஷெரீனா பிக் பாஸிடம் கூறி இருந்தார். இதற்கு பின்பாக ஷெரினா பொம்மையை எடுத்துக்கொண்டு டால் ஹவுஸில் சென்று வைக்கும் போது யாரும் தடுக்கவும் இல்லை, அவரை பிடிக்கவும் இல்லை.

ஆனால் தற்போது ஷெரீனா கையில் இருக்கும் பொம்மையை அமுதவாணன் வெகுவேகமாக பிடுங்க, அதை பார்த்த அசீம், “அமுதவாணன்.. சூப்பர்” என்று பேச, அதற்கு அமுதவாணனோ,  “என்ன.. இந்த பொண்ணு தனலட்சுமிய வாடி,.. போடினு சொன்ன.. இப்ப ஏகத்துக்கும் பேசுற.. என்ன.. இந்த நடிப்பையெல்லாம் சீரியல்ல வெச்சுக்க” என சொல்ல, பதிலுக்கும் அசீமும் பேசுறார். இவர்களுக்கு இடையிலான வாதத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. சன் டிவியின் பூவே உனக்காக உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் அசீம்.  இதேபோல் விஜய் டிவி அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தவர் அமுதவாணன். அண்மையில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் கடைசி சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Bigg boss 6 tamil : இந்தா வந்துருச்சுல்ல அடுத்த மோதல்.. Doll Task -ல் அமுதவாணன் Vs ஷெரீனா

தொடர்புடைய இணைப்புகள்

Amuthavanan Azeem Fight in doll task bigg boss 6 tamil

People looking for online information on Ayesha sherina, Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmim, Vijay Television, Vijay tv will find this news story useful.