விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அமுல் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
Also Read | ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா & யோகி பாபு நடிப்பில் ‘கோல்மால்’… First look உடன் வெளியான ரிலீஸ் Update
விக்ரம் ரிலீஸ்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே வைரல் ஹிட் ஆகின. அதுபோல மிரட்டலான தீம் இசையும் கவனம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வரவேற்பு…
வெளியானது முதல் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது விக்ரம். குறிப்பாக நடிகர்கள் கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதுபோலவே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இவர்கள் தவிர படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர்களும் திரையரங்கில் ரசிகர்களிம் கைதட்டலைப் பெற்றுள்ளனர்.
அமுல் நிறுவனம் வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தற்போது இந்தியாவின் பிரபல பால்பொருட்கள் உற்பத்தி நிறுவனமான அமுல் டிவீட் செய்துள்ளது. அதில் விக்ரம் படத்தில் கமல் துப்பாக்கியோடு இருக்கும் புகைப்படத்தை கார்ட்டூன் போல மாற்றி ஒரு கையில் டோஸ்டட் பிரட் இருக்குமாறு வடிவமைத்துள்ளது. மேலும் இந்த டிவீட்டோடு “Vikramul MASSKA ENTERTAINER” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் இப்போது கவனத்தைப் பெற்றுள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அதைப் பகிர்ந்துள்ளார்.
Also Read | ஷாருக் கானின் கவனம் பெற்ற ’ஜவான்’போஸ்டர்… போலீஸார் உருவாக்கிய விழிப்புணர்வு மீம்… Viral pic