கேப்டன்சி TASK.. சூடுபிடிச்ச போட்டி.. கடைசி வரை TOUGH கொடுத்த அசீம்.. இந்த வார தலைவர் இவர்தான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Advertising
>
Advertising

Also Read | "அழாதீங்க, We லவ் யூ".. நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு கலங்கிய சமந்தா.. ரசிகர்கள் செஞ்ச விஷயம்

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது. இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். இந்நிலையில், விக்ரமன் தான் கதிரவனை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார்.

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே வீட்டுக்குள் இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. இந்த டாஸ்க்கில் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு பக்கமும் வட்ட வடிவிலான பலூன்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக உடலில் மாட்டிக்கொண்டு இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பலூனை உடைப்பவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில், போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை சொல்கின்றனர். அதன்பின்னர், போட்டி துவங்கவே ஆரம்பம் முதலே அமுது மற்றும் அசீம் இடையே போட்டி அதிகரித்தது. இறுதியில் அமுதவாணன் இந்த போட்டியில் வென்றார்.ஆகவே, அவர் இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கேப்டன்சி டாஸ்க் முடிந்த பின்னர் பேசிய பிக் பாஸ், அமுதவாணன் கேப்டனாக தேர்வானாலும் இந்த வாரம் கேப்டன் யாருமில்லை என்றும், 7 பேருமே பிக் பாஸ் வீட்டை நிர்வகிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

 

Also Read | மைனா & விக்ரமனுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் அமுது.. ஸ்பாட்ல விக்ரமன் போட்ட கமெண்ட்😅..!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan won captaincy Task in Biggboss House

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.