தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
Also Read | "ஷிவின்க்காக கொண்டு வந்த சர்ப்ரைஸ்?".. மைனாவின் கணவர் வெச்ச ட்விஸ்ட்!! bigg boss tamil 6
இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.
இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இந்த நிலையில், Freeze டாஸ்க்கின் போது அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். கணவர் அமுதவாணனை பார்த்ததும் அவரது மனைவி கட்டியணைத்து கண்ணீர் விட, மிகவும் எமோஷனலான தருணமாகவும் அமைந்திருந்தது.
ஆனால், அதனை அப்படியே ஒரு கலகலப்பான தருணமாக மாற்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார் அமுதவாணனின் மகன். தந்தையை போல அவருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும் என சில போட்டியாளர்கள் சிறுவனிடம் கேட்கின்றனர். அதன் பின்னர், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை போல அப்படியே அமுதவாணனின் மகன் இமிடேட் செய்து வசனங்களையும் அப்படியே பேசுகி அனைவரையும் அவர் பங்கம் செய்கிறார்.
இதனைக் கண்டு அனைத்து போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்க, தந்தையை போலவே சிறுவனும் அசத்தலாக காமெடி செய்வது அனைவரையும் கவர்ந்துள்ளது. வருங்காலத்தில் சிறந்த ஒரு ஆளாக சிறுவன் வருவான் என்றும் ஏரளமானோர் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | "அம்மா, அக்காட்ட பேசுனேன் முடியாதுன்னு சொன்னாங்க".. ஷிவின்-காக வந்த சர்ப்ரைஸ் Guest.. Emotional பின்னணி!!