"ஆவேசமா பேசுன விஷயத்த அமுதவாணன் பையன் இப்டி FUN பண்ணிட்டாரே".. விக்ரமன் குடுத்த REACTION!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | AK62: டிவிட்டரில் கவர் போட்டோவை மாற்றிய விக்னேஷ் சிவன்.. அந்த அஜித் லுக் தான் இப்போ வைரல்!

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இந்த நிலையில், Freeze டாஸ்க்கின் போது அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தனர். கணவர் அமுதவாணனை பார்த்ததும் அவரது மனைவி கட்டியணைத்து கண்ணீர் விட, மிகவும் எமோஷனலான தருணமாகவும் அமைந்திருந்தது.

ஆனால், அதனை அப்படியே ஒரு கலகலப்பான தருணமாக மாற்றி பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார் அமுதவாணனின் மகன். தந்தையை போல அவருக்கும் மிமிக்ரி மற்றும் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும் என சில போட்டியாளர்கள் சிறுவனிடம் கேட்கின்றனர். அதன் பின்னர், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை போல அப்படியே அமுதவாணனின் மகன் இமிடேட் செய்து வசனங்களையும் அப்படியே பேசி அனைவரையும் அவர் பங்கம் செய்கிறார்.

அதிலும் குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான சில தினங்களில், விக்ரமன் கோபமாக போட்டியாளர்களிடம் பேசிய விஷயத்தை அப்படியே இமிடேட் செய்து அமுதவாணனின் மகன் Applause அள்ளிய வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் பேசி இருந்த விக்ரமன், "2 நாள் உடம்பு முடியாம படுத்தேன். கக்கூஸ் வந்து நீங்க கமகமன்னு போயிட்டு வர்றீங்கன்னா அதுக்கு காரணம் நாங்க தான். என்னை சிறைக்கு தள்ளுற அளவுக்கு நான் வேலையே செய்யலன்னு நீங்க சொல்றீங்கன்னா என் மேல அவ்ளோ காழ்ப்புணர்ச்சி, அவ்ளோ வன்மம் இருந்துச்சு. உங்க எல்லார்கிட்டயும் பேச முயற்சி பண்ணேன். நீங்க Eye Contact கூட குடுக்காம அவமானப்படுத்திட்டு போனீங்கன்னா, நான் வந்து வந்து பேசிட்டு இருக்கணுமா. அப்படி ஒண்ணும் நான் என் தன்மானத்தையோ, சுயமரியாதையை இழந்து உங்ககிட்ட பேச வேணாம். மக்கள் பாத்துகிட்டு இருக்காங்க" என சற்று ஆவேசமாக விக்ரமன் பேசி இருப்பார்.

இந்த நிலையில், தற்போது Freeze டாஸ்க்கில் வருகை தந்த அமுதவாணன் மகன், விக்ரமன் பேசிய சீரியஸான வசனத்தை அவரை போலவே உடல் மொழியுடன் பேசி காட்டி அனைவரையும் சிரிக்க வைத்து கைத்தட்டல்களை வாங்கி இருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் தற்போது பிக் பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Also Read | தனா வெளிய போனதும் பாதிச்ச விஷயம்.. முதல் முறையாக ஷிவின் உடைத்த சீக்ரெட்!!.. அட, ஆமால்ல!!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan Son imitate vikraman serious dialogue housemate reacts

People looking for online information on Amudhavanan, Amudhavanan Son imitate vikraman serious dialogue, Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv, Vikraman will find this news story useful.