பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6-ல் வெல்லப்போவது யார்? என்பது பற்றி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க ஷிவின்".. பங்கமாக கலாய்த்த விக்ரமன்..!
தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
நேரம் ஆக, ஆக பணமும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் பணமூட்டையை கட் செய்து தான் 3 லட்ச ரூபாயுடன் வெளியேறுவதாக பிக்பாஸிடம் தெரிவித்திருந்தார். தான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என சொல்லிய கதிர், பிரியாவிடை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் திடீரென பிக்பாஸ் வீடு சோகமடைந்துள்ளது.
பணப்பெட்டிக்கான பஸ்ஸரை அழுத்திய அமுதவாணன் தான் வெளியேறுவதாக அறிவித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்தனர். இதனையடுத்து, பேசும் விக்ரமன்,"அமுதவாணன் தன்னுடைய வெற்றி எதுன்னு தேர்ந்தெடுத்திருக்கிறார். பிறர் கொடுக்குற வெற்றியை விட, தனக்கான வெற்றியை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த வீட்டுல அவர் யாரையும் போட்டியாளரா பார்க்கல. அவர் எல்லோருக்கும் உதவி செஞ்சிருக்காரு. நீங்க இந்த போட்டிபோட வரல. வாழ வந்தீங்க. வாழ்ந்துட்டீங்க. நீங்க ரியல் ஹீரோ அமுதவாணன். நிறைய கலைஞர்களை நீங்க உருவாக்குறீங்க-ன்னு தெரியும். இதுக்கு மேலையும் நிறையபேரை உருவாக்குவீங்க நம்புறோம். நிறையபேருக்கு காட்ஃபாதர் நீங்க. இப்படியே உங்க பணிகளை தொடருங்க" என்கிறார். இதனையடுத்து, அமுதவாணனுக்கு போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
Also Read | பணப் பெட்டியுடன் வெளியேற துணிந்த அமுது?.. பரபரப்பான போட்டியாளர்கள்.. BiggBoss