ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | "Gender தனி மனிதர் தீர்மானிக்குறது, Fun பண்ண கூடாது".. மைனாவுக்கு விக்ரமன் அட்வைஸ்
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.
மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.
இதற்கிடையே, தற்போது BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. மற்ற சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் பலரும் பல விதமான விருதுகளை தங்களுக்கு தோன்றும் நபர்களுக்கு கொடுத்து கொண்டிருக்க, மேடையில் இருக்கும் அமுதவாணன், பூமர் அங்கிள் என்ற விருதினை விக்ரமனுக்கு கொடுப்பதாக அறிவிக்கிறார்.
இதனை மேடையில் ஏறி, கிரீடத்தை ஏற்று தலையில் அணிந்து கொள்ளும் விக்ரமனிடம், இதை அன்பாக ஏற்றுக் கொள்ளுமாறும் அமுதவாணன் தெரிவிக்கிறார். கிரீடத்தை தலையில் ஏற்றுக் கொண்டு பேசும் விக்ரமன், "உங்க புரிதல் தவறுங்கிறதால நான் இதை ஒத்துக்கல, ஆனா மாட்டிக்கிறேன்னு சொல்றேன். பொண்ணுன்னா இந்த வேலை தான் பார்க்கணும், ஆம்பளன்னா அழக்கூடாதுன்னு சொல்றது, இது எல்லாமே பூமர் கணக்குல வரும். இதுக்கு எல்லாமே எதிரான ஆள் நானு. நீங்க கொடுத்த மரியாதைக்காக இதை நான் மாட்டிக்கிறேன். நான் பூமர் இல்ல. நான் மாடர்ன் தான்" என விக்ரமன் தெரிவித்ததும், என்னுடைய புரிதல் தவறா, இல்லை நான் சொல்வது தவறா என்றும் அமுதவாணன் கேட்க உங்கள் புரிதலே தவறாகத் தான் இருக்கிறது என்றும் விக்ரமன் பதில் கூறுகிறார்.
முன்னதாக ADK கொடுத்த விருதினை கூட அசிம் ஏற்றுக் கொள்ளாமல் அதனை மறுத்திருந்தது பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனால் விருது டாஸ்க்கில் நிச்சயம் நிறைய விவாதங்கள் அரங்கேறும் என்றும் தெரிகிறது.
Also Read | "எனக்கு இது வேணாம்".. Task-ல் ADK கொடுத்த விருது.. தூக்கி வீசிய அசிம்!!.. Bigg Boss