தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.
Also Read | ரஜினியுடன் செல்ஃபி எடுத்த A.R. ரஹ்மான்.. கூட பிரபல இயக்குனர் வேற இருக்காங்க!
இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.
பொம்மை டாஸ்க் தொடங்கி கடந்த வாரம் நடந்து முடிந்த நீதிமன்ற டாஸ்க் வரை போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்ட நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற நேரங்களில் ஒற்றுமையாக இருந்தால் கூட, டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் பஞ்சாயத்து தான். கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர். இவர்களின் அணி அடுத்தடுத்த நாட்களில் இடம் மாறக்கூடும்.
இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.
அப்படி போகும் போது அந்த போட்டியாளர் பிடிபட்டால், அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து எதிரணியினர் தொடாமல் பேசியும் ரியாக்ஷன் பண்ணியும் டார்ச்சர் செய்வார்கள். பதிலுக்கு அந்த பிடிபட்டவர் ரியாக்ட் செய்தால் தோல்வி என அர்த்தம். அப்படியானால் என்ன பண்ண வேண்டும்? மாட்டிக்கொள்ளும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்துவிட வேண்டும். ஆனால் மன திடகாத்திரத்துடன் எதிரணியினரின் டார்ச்சருக்கு ரியாக்ட் செய்யாமல் பஸ்ஸர் அடிக்கும் வரை இருந்தால் அவர்களுக்கு, தேவைப்படும் பொருளுடன் வெற்றியுடன் வெளியே செல்லலாம்.
இப்படி இந்த புதிய டாஸ்க்கில் உள்ள விதிமுறைகள் அடிப்படையில், மிக சாமர்த்தியமாக விளையாடி வரும் நிலையில், இதற்கு மத்தியில் அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் சண்டை போட்டது தொடர்பான விஷயம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த டாஸ்க் மத்தியில் வீட்டிற்குள் ஏலியன்கள் இருக்கும் பகுதியில் பழங்குடியின மக்களாக இருக்கும். கதிரவன் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் கதிரவன் கால்களை அமுதவாணனும் பிடித்துக் கொள்ள கதிரவன் கீழே விழுவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கதிரவன் அமுதவாணனிடம் முறையிட்டுக் கொண்டிருக்க அங்கே வரும் அசீமும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது.
அந்த சமயத்தில் அமுதவாணன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் மோதிக் கொள்ள மாறி மாறி அடித்ததாகவும் கருத்துக்களை கோபத்துடன் தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். தனது உடலில் கை வைத்ததாகவும் அமுதவாணன் ஆவேசத்துடன் தெரிவிக்க, 'அடிடா அடிடா' என்றும் கொந்தளிப்புடன் கூறிக் கொண்டிருக்கிறார் அசீம். 'என்ன அடிச்ச நீ' என அமுதவாணன் கூறியதும், 'உனக்கு அவ்வளவு நெஞ்சுரப்பு இருந்தா என்ன அடிடா, தைரியம் இருந்தா அடிடா' என அசீம் ஆவேசத்துடன் சொல்வதும் தெரிகிறது.
டாஸ்க் என வந்து விட்டால், போட்டியாளர் மத்தியில் சண்டை ஏற்படும் நிலையில் தற்போது முகத்துக்கு நேராக அசீம் மற்றும் அமுதவாணன் மோதி அடிதடி குறித்து பேசுவது கடும் பரபரப்பை பார்வையாளர்கள் மத்தியில் உண்டு பண்ணி உள்ளது.
Also Read | உலகப்புகழ் பெற்ற கடற்கரையில் அம்மா அப்பாவுடன் மாளவிகா மோகனன்.. வைரல் ஃபோட்டோஸ்