"அமுதவாணனை வெளிய அனுப்ப".. பிக் பாஸ் வீட்டில் பிளான் நடந்ததா??... வெளிச்சத்துக்கு வந்த உண்மை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் அமர்க்களமாக நடந்து முடிந்திருந்தது.

Advertising
>
Advertising

                            Image Credit : Vijay Television

Also Read | "சினிமாவுக்கு வரணும்ன்னு அப்ப எண்ணமில்ல, இங்க எனக்கு போட்டின்னு".. ஆர்ஜே பாலாஜி Open டாக்!!

பல்வேறு விறுவிறுப்பான கட்டங்களுக்கு மத்தியில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் வெற்றியாளராக அசிம் அறிவிக்கப்பட்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் தொடர்ந்து பிக் பாஸ் குறித்த கருத்துக்கள் இணையத்தில் பரவலாக இருந்து வருகிறது. அதே போல, பல போட்டியாளர்கள் குறித்து ஏராளமான கருத்துக்களும் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அந்த வகையில், பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்கி இருந்த அமுதவாணனும் அசத்தலான போட்டியாளராக வீட்டிற்குள் வலம் வந்திருந்தார். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் தன்னை ஒரு சிறந்த காமெடியன் மற்றும் கலைஞனாக முன்னிறுத்திய அமுதவாணன், சக போட்டியாளர்கள் மத்தியில் தன்னுடைய காமெடி திறமை மூலம் தொடர்ந்து பலரையும் சிரிக்க வைத்ததுடன் மட்டுமில்லாமல், ஏரளமான பார்வையாளர்களின் ஃபேவரைட் ஆகவும் இருந்தார்.

Image Credit : Vijay Television

இந்த நிலையில், தற்போது Behindwoods நேயர்களுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும், தன்னுடன் ஆடிய போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அமுதவாணனுக்கு நிறைய தெரியும் என நினைத்து அவரை முதலிலேயே வெளியேற்றினால் நாம் நமது கேமை ஆடலாம் என யாராவது நினைத்து உங்களுக்கு எதிராக விளையாட வேண்டும் என ஏதாவது செய்ததை போன்று நீங்கள் உணர்ந்தீர்களா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த அமுதவாணன், "நான் உணர்ந்தேன். அது எல்லா கேம்லயும் எல்லாரும் நினைக்குறது தான். அத நான் எப்பவுமே தப்பா நினைக்க மாட்டேன். இந்த வீட்டுலையும் அந்த மாதிரி நெனச்சு இருப்பாங்க. அது எனக்கு அங்கயே தெரியும். அதைத்தாண்டி இப்ப வந்து டிவில பார்க்கும் போது தான் இவ்ளோ பேரு இருக்காங்களான்னு இப்ப தான் தெரியுது. எனக்கு தெரியாத விஷயம் எல்லாம் நான் இப்ப தான் பாத்தேன். இருந்த 20 பேருல ஒருத்தர், ரெண்டு பேர் தான் அப்படி இருந்தாங்க. அதுலயும் ஒருத்தர் ரொம்ப ஸ்ட்ராங். பிக் பாஸ் வீடா இருந்தா ஸ்ட்ராங்கா சொல்லி இருப்போம். இந்த இடம்னால கொஞ்சம் Safe Zone ஆ இருப்போம். எனக்கு தெரியாதுங்க" என தனக்கு எதிராக கேம் ஆடியவர் பெயரை சொல்லவும் அமுதவாணன் மறுத்தார்.

Also Read | "அசிம்னா பயமா?.. விக்ரமன் கூட சண்டை வர்றப்போ".. சீக்ரெட் உடைத்த போட்டியாளர்!!

"அமுதவாணனை வெளிய அனுப்ப".. பிக் பாஸ் வீட்டில் பிளான் நடந்ததா??... வெளிச்சத்துக்கு வந்த உண்மை வீடியோ

Amudhavanan about housemates want to exit him in bigg boss

People looking for online information on Amdhavanan, Amudhavanan about BB housemates will find this news story useful.