ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
Also Read | "வேதனைய சொன்னது ஒரு குத்தமா? 😅".. அசிம் சொன்னதும் யோசிக்காம கலாய்ச்ச Bigg Boss!! 😂
அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக உள்ளனர்.
இதனிடையே, Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில், விக்ரமன் மற்றும் அசிம் குறித்து அமுதவாணன் சொன்ன விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.
பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோர் நிறைய முறை வாக்குவாதங்களில் ஈடுபட்டதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்து முடிந்த மிதிவண்டி டாஸ்க்கில் இருவரும் ஒரே சைக்கிளில் அமர்ந்து டாஸ்க்கை தொடங்கி இருந்தனர். முன்னதாக, அசிம் இருக்கும் சைக்கிளில் யார் இருக்க போகிறீர்கள் என கேட்ட போது தான் இருப்பதாக விக்ரமன் குறிப்பிட்டு ஒன்றாக சைக்கிளில் இருக்கும் முடிவை எடுத்திருந்தார்.
அப்படி ஒரு சூழலில், டாஸ்க்கின் போது விக்ரமன் மற்றும் அசிம் ஆகிய இருவரும் ஒரே சைக்கிளில் ஜாலியாக டாஸ்க் ஆடி வருகின்றனர். அந்த சமயத்தில், அருகே உள்ள சைக்கிளில் இருக்கும் அமுதவாணன், "விக்ரமன், அசிம் ஒவ்வொரு தடவையும் அடிச்சுக்கிட்டாங்க. ஆனா, இன்னைக்கி ஒண்ணா ஒற்றுமையா சைக்கிள்ல போறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அடிச்சுப்பாங்களா?. இல்ல இப்படியே ஒற்றுமையா போவாங்களா?" என கமெண்ட் செய்கிறார்.
இதனைக் கேட்டதும், "நாங்க நல்லா இருந்தாலும் நீங்க நல்லா இருக்க விடமாட்டீங்க போலயே" என சிரித்துக் கொண்டே தெரிவிக்கிறார் அசிம்.
Also Read | "மனசு நெறஞ்சுருக்கு, கனவும் பலிச்சுடுச்சு".. 15 வயதில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!!..