2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கங்கனா ரனாவத்.
நான்கு தேசிய விருதுகளை வென்ற நடிகையான இவர் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ள 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக கனிசமாக 20 கிலோ உடல் எடையை கூட்டி நடித்துள்ளார்.
தலைவி படத்தை இயக்குனர் A.L. விஜய் இயக்குகிறார். எம். ஜி. ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக நாசரும், ஆர். எம். வீரப்பனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி இன்று ரிலீஸ் போஸ்டரை பகிர்ந்து படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இப்படம் இந்தியில் நெட்ஃபிளிக்ஸ்சிலும், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைமிலும் வெளிவர உள்ளது.