புஷ்பா 'SRIVALLI' ஸ்டெப்ல இப்டி ஒரு கத இருக்கா??.." அமிதாப் பச்சன் சொன்ன 'சீக்ரெட்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுகுமார் இயக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரை அரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் 'புஷ்பா'.

Advertising
>
Advertising

Also Read | இது வேற லெவல்! பெங்காலி மொழியில் சாய் பல்லவி நடித்த தமிழ்ப்படம்.. சூப்பர் சம்பவம்!

இந்த திரைப்படத்தில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தெலுங்கில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், பேன் இந்தியன் படமாக வெளியாகி, இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் பல வசூல் சாதனைகளையும் புரிந்திருந்தது.

மேலும், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் அடுத்து தயாராக உள்ளது. புஷ்பா படம் எந்த அளவுக்கு வெற்றியை பெற்றதோ, அந்த அளவுக்கு படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் மக்கள் மத்தியில், வேற லெவல் ஹிட்டடித்தது. புஷ்பா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஸ்ரீவள்ளி, ஓ அண்டவா மாமா, சாமி சாமி உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வேற லெவலில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீவள்ளி பாடலில் வரும் பிரபல ஸ்டெப் குறித்து, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தற்போது ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ஸ்ரீவள்ளி பாடலில், அல்லு அர்ஜுன் செருப்பு கழண்டு விழுவது போல ஒரு ஸ்டெப் இடம்பெற்றிருக்கும். இது மிகவும் பிரபலம் ஆனதால், பலரும் இதனை ரீல்ஸ் செய்து வீடியோவாகவும் வெளியிட்டனர்.

இதனிடையே, சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட 'குரோர்பதி' நிகழ்ச்சியில் ஸ்ரீவள்ளி பாடல் குறித்து அசத்தலான சீக்ரெட் ஒன்றை அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். ஒருமுறை ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சமயத்தில், ஸ்ரீவள்ளி பாடலில், செருப்பை தூக்கி, அல்லு அர்ஜுன் போடுவது பற்றி, அமிதாப்பச்சன் இயக்குனருடன் கேட்டுள்ளார்.

அதாவது, அது தற்செயலாக நடந்ததா அல்லது நடன ஸ்டெப்பா என கேட்டுள்ளார். அப்போது, அல்லு அர்ஜுன் நடனமாடும் போது, தவறுதலாக செருப்பை அல்லு அர்ஜுன் விட்டதாகவும், அதுவே பின்னர் சிறப்பாக இருந்ததால் இயக்குனர் சரி என சொல்லி விட்டதாகவும், பின்னர் அந்த ஸ்டெப் வைரல் ஆகவே, பலரும் அதனை ரீல்ஸாக செய்து பிரபலம் ஆக்கவும் செய்திருந்தனர்.

புஷ்பா படத்தில், ஸ்ரீவள்ளி பாடலில், ஹிட்டடித்த ஸ்டெப் தொடர்பாக தற்போது அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள சுவாரஸ்யமான சீக்ரெட் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "கோபிய விட்டு சாத்தணும்".. போடு! நம்ம சசிகுமார் பாக்கியலட்சுமி சீரியல் பாக்குறாரா?

தொடர்புடைய இணைப்புகள்

Amitabh Bachchan about allu arjun srivalli step from pushpa

People looking for online information on Allu Arjun, Allu arjun srivalli step, Amitabh Bachchan, Pushpa will find this news story useful.