“பாவனி மீதான அன்பை ஆயுதமா பயன்படுத்துறான் அமீர்!”.. முட்டையை வீசியடித்த போட்டியாளர்! #BIGGBOSS5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்கெட் டூ ஃபினாலே: பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகளில் தீவிரமாக ஆடி வருகின்றனர். இதில் தற்போது பிக்பாஸ் சொல்லும் புகார்களுக்கு தகுந்த நபரை தேர்ந்தெடுத்து அவர்களின் உருவப்படம் மீது கலர் முட்டைகளை வீசும் டாஸ்க் நடைபெற்றது.

Amir uses pavani love as weapon priyanka in finale task biggboss
Advertising
>
Advertising

ஒண்ணுமே பண்ணல.. ஆனா இவ்ளோ தூரம் வந்துட்டாரு

இதில் முன்னதாக, “ஒண்ணுமே பண்ணல.. ஆனா இவ்ளோ தூரம் வந்துட்டாரு” என சொல்லி யார் மீது முட்டையை வீசுவீர்கள் என கேட்டபோது, “எதாவது பண்ணாதான் அது நடக்கும். சஞ்சீவ் அரசியல் டாஸ்க்கை கூட நன்றாகவே பண்ணினார். பலரும் அதை செய்தனர். எனினும் சிபியை நான் தேர்வு செய்கிறேன்!” என சொல்லி சிபியின் உருவம் மீது ராஜூ கலர் முட்டை அடித்தார்.

Amir uses pavani love as weapon priyanka in finale task biggboss

பின்னர், “இதற்கு முன்பாக வேலைகளை சரிவர செய்யவில்லை, இப்போது கொஞ்சம் சரியாக பண்ணுகிறார்” என்று சொல்லி ராஜூவின் உருவம் மீது சஞ்சீவ் கலர் முட்டை அடித்தார். இதேபோல், சிபி அமீரின் உருவம் மீது கலர் முட்டை அடித்தார்.

ஒண்ணும் இல்லாத விஷயத்தை கூட பெருசாக்குறாங்க

“ஒண்ணும் இல்லாத விஷயத்தை கூட பெருசாக்கி, அதை கின்னஸில் கொண்டு வருகிறார்” என சொல்லி ராஜூவும் , “வீட்ல இருக்குறவங்கள டென்ஷன் ஆக்குறாங்களோ இல்லயோ அவங்களும் டென்ஷன் ஆகுறாங்க!” என சொல்லி சஞ்சீவும், இவர்களை தொடர்ந்து சிபி உள்ளிட்டோரும் பிரியங்காவின் உருவம் மீது கலர் முட்டைகளை அடித்தனர். இதேபோல் இதே காரணத்துக்காக ராஜூவின் உருவம் மீது பிரியங்கா கலர் முட்டை அடித்தார்.

யோசிக்காமல் செய்த ஒரு விஷயத்தால் பெரிய பிரச்சனை

“இவர் யோசிக்காமல் செய்த ஒரு விஷயத்தால் பெரிய பிரச்சனை ஆனது என்றால் அது யார்?” என்று பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு, அமீரின் உருவம் மீது ராஜூவும், ராஜூவின் உருவம் மீது சஞ்சீவ், சிபி, ராஜூ உள்ளிட்டோரும் கலர் முட்டைகளை அடித்தனர்.

அன்பை ஆயுதமாக பயன்படுத்தியவர்கள் யார்?

பின்னர், “அன்பை ஆயுதமாக பயன்படுத்தியவர்கள் யார்?” என கேட்டபோது பேசும்போது, பிரியங்கா, “பாவனியின் மீதான அன்பை ஆயுதமாக பயன்படுத்தி அமீர் தன் கேமை ஆடியிருக்கிறார். அதை அவர் பாவனியை நாமினேட் செய்யும்போது அறிந்துகொள்ள முடிந்தது” என சொல்லி அமீரின் உருவம் மீது கலர் முட்டையை அடித்தார்.

அதன் பின்னர் பேசிய அமீர், “பாவனியின் மீதான அன்பை நான் கேடயமாக பயன்படுத்தவில்லை. அது வேற, கேம் வேற. பிரியங்காவுக்கு நான் பாவனி மீது வைக்கும் அன்பு பொய்யாக தெரியுதென்றால், என் மீது பிரியங்கா வைத்திருக்கும் அன்பும் பொய்யாக தெரியுது” என்று சொல்லி பிரியங்கா உருவம் மீது முட்டையை உடைத்தார். 

Also Read: தாமரை & ராஜூவின் சீரியஸ் arguement அப்போ பிரியங்காவின் சைலண்ட் சம்பவம்!!! யாருய்யா அந்த எடிட்டர்?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Amir uses pavani love as weapon priyanka in finale task biggboss

People looking for online information on Amir kissed pavani, Amir pavani, Amir pavani love, BiggBoss5, BiggBossTamil5, Pavani amir, Vijay tv will find this news story useful.