பிக் பாஸ் வீட்டுக்குள் பாவனியிடம் ஆடைகளை பார்த்து அணியச் சொல்லி, அமீர் சொன்ன விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வந்து சந்தித்து விட்டுச் செல்கின்றனர். அப்படி வருபவர்கள் தாங்கள் பார்க்க வரும் போட்டியாளர்கள் பற்றி, வெளியில் இருப்பவர்களின் பார்வைகளைப் பகிர்ந்து விட்டுச் செல்கின்றனர்.
விருந்தினர்கள்:
அந்தவகையில் முன்னதாக சிபியின் மனைவி வருகை தந்தார். ராஜூவின் மனைவியும் அம்மாவும் வருகை தந்தனர். இதேபோல் நிரூப்பின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தார். நிரூப்பின் முன்னாள் காதலியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தார். எனினும் அவர் கண்ணாடி பெட்டகத்தில் இருந்து கொண்டு போட்டியாளர்களை சந்தித்து பேசினார். அக்ஷராவின் பெற்றோர், வருணின் பெற்றோர், தாமரையின் மகன், பிரியங்காவின் அம்மா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் வருகை தந்தனர்.
அமீர் - பாவனி:
இந்த நிலையில் பாவனியின் சகோதரியும் தாயாரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தபோது, பாவனியை சந்தித்துப் பேசினர். அப்போது அமீர் குறித்து பாவனியின் சகோதரி பாவனியிடம் பேசினார். குறிப்பாக அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரிடையேயான நிகழ்வுகள் வெளியில் இருந்து எவ்வாறு பார்க்கப்படுகின்றது என்பதை பாவனியின் சகோதரி முன்வைத்தார்.
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக வந்தவர் பிரபல கோரியோகிராபர் அமீர். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கோரியோகிராபராக இருந்த அமீர், 50 நாட்களைக் கடந்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே நுழைந்தார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 82-ஆம் நாள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதனிடையே பாவனியிடம் அமீர் தன் காதலை சொன்னார். ஆனால் பின்னாளில் அதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.
ப்ரோபோஸ்:
அண்மையில் பாவனியுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டே பாவனியிடம் ப்ரொபோஸ் செய்த அமீரிடம், பாவனி அதை தீர்க்கமாக மறுத்ததுடன், “நீ என்னுடைய நல்ல நண்பன்!” என்று கூறினார். அப்போதுதான் அமீர், “நான் இதையெல்லாம் சீரியசாக சொல்வதாகவா நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அப்போது பாவனி, “ஆமாம்.. நீ எப்போதும் சீரியஸாதானே இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாய்?” என்று தெரிவித்தார். அதன் பின்னர் பாவனி அமீரை இவ்வாறாக புரிந்துகொண்டு வைத்ததற்கு மன்னிப்பும் கேட்டார்.
டிரெஸ் பார்த்து போடுங்க:
இந்நிலையில் பாவனியிடம் பேசிய அமீர், “எங்கள் வீட்டில் இருந்து வருகிறார்கள்!” என இழுக்க, பாவனி, அமீரிடம் என்ன என்று கேட்க, மீண்டும் அமீர், “இல்ல, வீட்ல இருந்து வர்றாங்க.. அதனால் கொஞ்சம் டிரெஸ்ஸை பார்த்து போடுங்கள்!” என்று மெல்லிய குரலில் சொல்கிறார். இதற்கு பாவனி கோபப்படவும் இல்லை, ஆமோதித்தபடி புன்னகைக்கவும் இல்லை.
நியூட்ரலான ஒரு ரியாக்ஷனை கொடுக்க, அதனை பார்த்த அமீர், மேலும் தம்முடைய பேச்சை தொடர்ந்தார், “இல்லை, உங்களுக்கு அது வசதி என்றால், சௌகரியம் என்றால் போடுங்கள். நான் கட்டாயப்படுத்தவில்லை. இதற்காக கோபித்துக் கொள்ள வேண்டாம். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டு இருந்தால் என்ன செய்வது?” என்று தனக்குத்தானே புலம்பினார்.