ஆமிர் கான் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
டாம் ஹாங்க்ஸ் நடித்த FORREST GUMP படத்தின் ரீமேக்கில் கம்ப் கதாபாத்திரத்தில் ஆமீர் கான் நடிக்கிறார்.
1994 ஆம் ஆண்டு வெளியான FORREST GUMP திரைப்படத்தை ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கினார். இவர் 'Back to the Future' சீரிஸ் படங்களை இயக்கிவர், 677 மில்லியன் டாலர் வசூல் செய்து 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய படம் இது.
சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளைக் குவித்தது. இந்த படத்தில் ஆமீர் கானுடன் கரினா கபூர் கதாநாயகியாக ராபின் ரைட் பாத்திரத்தில் நடிக்கிறார். நாக சைதன்யா முக்கிய ராணுவ வீரர் வேடத்தில் நடிக்கிறார்.
அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது நிறுவனம் வழியாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த படத்தின் நாக சைதன்யா, பாலராஜூ எனும் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா ராணுவ வீரனாக நடித்துள்ளார். நடிகர் ஆமிர் கான் லால் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரூபா எனும் கதாபாத்திரத்தில் நடிகை கரீனா கபூர் நடிப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் வருகிற 11 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை ஒட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குறித்து ஆமிர் கான் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்ற தளத்தில் நடிகர் அஜித்திடம் கேட்க விரும்பும் கேள்வியாக "அஜித்தை நான் பார்க்கும் போதெல்லாம் அவரிடம் உள்ளார்ந்த ஆற்றல் சக்தி எப்போதும் அதிகம் இருப்பதாக உணர்கிறேன். அதை எப்பொழுதும் பயன்படுத்தும் உத்வேகத்துடன் அஜித் இருப்பார். இந்த ஆற்றல் சக்தி எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது என கேள்வி கேட்பேன்" என ஆமிர் கான் பேசியுள்ளார். மேலும் விஜய் குறித்து பேசும் போது விஜய் எனக்கு தம்பி போல என கூறியுள்ளார். ரஜினிகாந்த், தனுஷ் & கமல்ஹாசன் குறித்தும் ஆமிர்கான் பேசியுள்ளார்.
முழு வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.