தமிழ்நாட்டில் தேனியை சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது நிறுவனத்தில் அஜித்துக்கு சிலை வைத்துள்ள விசயம் வைரலாகி வருகிறது.
Also Read | குழந்தைகளுடன் ஊரை விட்டு செல்லும் கண்ணம்மா.. கதறி அழும் பாரதி.. இந்த வார பாரதி கண்ணம்மா!
தேனி மாவட்டம் சின்னமனூரில் அஜித் ரசிகர் காளிதாஸ் என்பவர் வீரம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அஜித் மீது தீவிர பற்று கொண்ட இவர், தனது நிறுவனத்திற்கே வீரம் என பெயர் சூட்டியதால் அப்பகுதியில் அஜித் ரசிகராக பிரபலமான நிலையில், தற்போது துணிவு படத்தையொட்டி அஜித்து சிலை வைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து துணிவு படத்தின் சிங்கிள் பாடலும் வெளியானது. ஆனால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே, அதனை கொண்டாடும் விதமாக காளிதாஸ் தனது உணவகத்தில் பழைய பத்து ரூபாய் நோட்டுக்கு பிரியாணி வழங்குவதாக அறிவித்து அதை செயல்படுத்தவும் செய்தார்.
முன்னதாக அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி அன்று காளிதாஸ், தனது உணவகத்தில் டீ அருந்தும் எல்லாருக்கும் ஒரு டீயை ஒரு ரூயாய்க்கு வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்கடுத்து துணிவு படத்தின் ஜில்லா ஜில்லா சிங்கிள் வெளியானதை அடுத்து, வீரம் ரெஸ்டாரண்டில் இரண்டாவது கிளையை தொடங்கி இருக்கிறார். இதில்தான் நடிகர் அஜித்தின் ஆறடி உயர மெழுகுசிலையை ரசிகர்களின் பார்வைக்காக வைத்துள்ள காளிதாஸ், AK61 எனப்படும் அஜித்தின் 61வது படமான துணிவு படத்தை வரவேற்கும் விதமாக அஜித்தின் முகம் பதித்த 61 டீ ஷர்ட்டுகளை நபர்களுக்கு வழங்கினார்.
தென் தமிழகத்தில் அஜித்துக்கு சிலை வைத்துள்ள இந்த விசயம் வைரலாகி வருகிறது.
Also Read | "சிங்கிளாக வரும் சிங்கம்"..சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள்.. ஹர்பஜன் சிங்கின் மாஸான ட்வீட்..!