'மௌனம் பேசியதே',' ராம்', 'பருத்திவீரன்' போன்ற படங்களை இயக்கி அதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் அமீர். இவர் தனுஷூடன் 'வட சென்னை' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இந்நிலையில் Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், Bigg Boss அனைவரையும் influence பண்ணும். இப்போ எல்லா மக்களும் ஸ்டெரஸ்ல இருக்காங்க. எல்லாருக்கும் வேலைப்பழு அதிகம்.
அதனால் அவங்களுக்கு ஒரு ரெஸ்ட் தேவைப்படுது. அதுல இருந்து விடுபடனும்னு நினைக்குறவங்க ஆன்மிகத்துக்கு போறாங்க. தண்ணி அடிக்குறவங்க தண்ணி அடிக்குறாங்க. அந்த பழக்கம் இல்லாதவங்க. ரொம்ப ரொம்ப டேஞ்சரான டிவிய ஆன் பன்றாங்க. தண்ணி அடிக்குறத விட டேஞ்சர்.
எது கொடுத்தாலும் இங்க பார்ப்பாங்கங்கறதுதான் உண்மை. குற்றம் நடந்தது உண்மை இங்க பார்த்துட்டு இருந்தாங்க. மிட் நைட் மசாலானு கூட டிவில வந்தது. அதையும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பார்த்தாங்க.
என் தனிப்பட்ட கருத்தை கேட்டீங்கனா பிக்பாஸ் வருவதை நான் விரும்பல. அதுல எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. குழாய் அடியில் இருந்து கொண்டு அடுத்த குடும்பத்தை பற்றி சில படிக்காத பெண்கள் பேசிக்கொண்டிருந்தாங்களோ,அல்லது பக்கத்து வீட்டுல நடக்குற சண்டைய காதுகுடுத்து கேட்குறது எப்படி தவறோ அது போன்ற நிகழ்ச்சிய தான் நான் பார்க்குறேன் என்றார்.
இது முழுமையாக முன் கூடிய திட்டமிட்டு நடத்தப்படுற நிகழ்ச்சி. மூனு சீசன்லயுமே ஒரு இளவயது ஆண் இருக்கு. ஒரு இளவயது பெண் இருக்கு. எப்படியாவது அவங்களுக்குள்ள ஒரு லவ்வ கிரியேட் பண்ணி, திட்டமிட்டு நடத்துறிங்க. இது என் சமூகத்துக்கு எந்த வகையிலும் பயன்படாது'' என்றார்.