அடடே.. ரஞ்சிதமே டான்ஸ் மூலம் வைரலான பெண்ணுக்கு.. ராஷ்மிகாவின் அசத்தல் கிஃப்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்த சூழலில், எஸ் தமன் இசையில் உருவாகி இருந்த பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர்.. படப்பிடிப்பில் இணையும் சார்பட்டா & துணிவு பட நடிகர்.?.

அதிலும் குறிப்பாக, நடிகர் விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடி இருந்த "ரஞ்சிதமே" பாடல், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்த பாடலின் வீடியோவில் மற்றொரு சிறப்பம்சமாக நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோர், சுமார் ஒன்றரை நிமிடம் வரை சிங்கிள் ஷாட்டில் நடனமாடி இருந்தனர். ஃபுல் எனர்ஜியுடன் அனைவரும் ஆடி இருந்த ரஞ்சிதமே பாடலின் வீடியோவும் திரை அரங்கில் ரசிகர்களை துள்ளல் போட வைத்திருந்தது.

இந்த பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் நடனம் ஒரு பக்கம் கவனம் ஈர்த்தாலும் விஜய்க்கு அருகே ஆடி இருந்த பெண் ஒருவரும் பலரை வெகுவாக கவர்ந்திருந்தார். ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு அருகே சிவப்பு நிற புடவை அணிந்தபடி ஒரு இளம்பெண் நடனமாடி இருப்பார். மிகவும் எனர்ஜியுடன் பட்டையைக் கிளப்பி இருந்த அவரது நடனம், இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

அவரது பெயர் அம்பிகா கோலி ஆகும். மேலும் மும்பையைச் சேர்ந்த இவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களிலும் பேக்ரவுண்ட் டவுன்சராக ஆடியுள்ளார். தொடர்ந்து, வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் அவரை தமிழக் மக்கள் மத்தியிலும் பிரபலம் ஆக்கி உள்ளது.

இந்த நிலையில், டான்சர் அம்பிகா கோலி, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஞ்சிதமே பாடல் நடன அனுபவம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவலை அம்பிகா கோலி பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் விஜய் குறித்தும், நடிகை ராஷ்மிகா குறித்தும் பேசி இருந்தார்.

அப்போது நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்த பரிசு பற்றி பேசி இருந்த வைரல் டான்சர் அம்பிகா கோலி, "அவர் மிகவும் ஸ்வீட். ரஞ்சிதமே பாடல் ஷூட்டிங் போது அவர் ஒரு மூக்குத்தியை (Nose Ring) அணிந்திருந்தார். அது மிகவும் அழகாக இருந்தது. அப்போது அதை எங்கே வாங்குனீர்கள் என்று அவரிடமே கேட்டேன். அப்போது என்னிடம் வேறு இருக்கிறது, இதை வேண்டுமானால் எடுத்துக் கொள் என என்னிடம் கூறினார். நானும் சரி எனக்கூற எனக்கு அதனை பரிசாக அளித்திருந்தார் ராஷ்மிகா" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதே போல, ரஞ்சிதமே பாடலால் தான் தமிழ்நாட்டில் வைரல் ஆனது பற்றியும் நிறைய விஷயங்களை மனம்திறந்து பேசி இருந்தார் அம்பிகா கோலி.

Also Read | தென் தமிழகத்தின் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் பிரபல ஹீரோயின் சாமி தரிசனம்..! வீடியோ

அடடே.. ரஞ்சிதமே டான்ஸ் மூலம் வைரலான பெண்ணுக்கு.. ராஷ்மிகாவின் அசத்தல் கிஃப்ட்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ambika Kohli opens up about rashmika gift in ranjithame song shoot

People looking for online information on Dancer Ambika Kohli, Dancer Ambika Kohli exclusive Interview, Ranjithame, Ranjithame song shoot, Ranjithame Viral Dancer, Rashmika Mandanna will find this news story useful.