பிரபல OTT- யில் பொங்கலுக்கு வெளியாகும் புதிய ஆந்தாலஜி திரைப்படம்! செம ட்ரீட் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை, இந்தியா – 30 டிசம்பர், 2021 - ‘புத்தம் புதுக் காலை’யின் வெற்றியைத் தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோ இன்று அதன் இரண்டாவது அத்தியாயமான ‘புத்தம் புது காலை விடியாதா.’ தொடரை அறிமுகம் செய்வதை அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

‘புத்தம் புது காலை விடியாதா.’

இப்புதிய ஐந்து-எபிசோடுகள் கொண்ட தொடர். நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் சொந்த அனுபவத்தில் கண்டறிதல் ஆகியவற்றின் கதைகளைக் கொண்டுள்ளது, இது ஐந்து வெவ்வேறு இயக்குநர்களின் தனித்துவமான பார்வைகளின் மூலம் சொல்லப்படுகிறது. Putham Pudhu Kaalai Vidiyaadhaa… பிரைம் வீடியோவில் ஜனவரி 14 அன்று இந்தியாவிலும் உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் வெளியாகவுள்ளது.

"ஒரு நாள் நான் பெரிய ஹீரோ ஆவேன். அப்போ நீங்க என் மீது பொறாமைப்படுவீங்க".- டோவினோ தாமஸ் பதிவு

‘புத்தம் புது காலை விடியாதா.’ அத்யாயங்கள்

இந்தியாவை உலுக்கிய கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது லாக்டவுனைப் பிரதிபலிக்கும் வகையில், விரக்தியின் மத்தியில் நம்பிக்கை மற்றும் அன்பை பகிர்தல் குறித்து இத்தொகுப்புகள் கவனம் செலுத்துகின்றன. தமிழ்த் தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் உள்ள அத்தியாயங்கள்:
• பாலாஜி மோகன் இயக்கிய “முககவச முத்தம், கௌரி கிஷன் மற்றும் டீஜே அருணாச்சலம் நடித்துள்ளனர்.
• ஹலிதா ஷமீம் இயக்கிய “லோனர்ஸ்”, லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் நடிகை சமந்தாவின் கோவா சுற்றுலா புகைப்படங்கள்!


• மதுமிதா இயக்கிய “மௌனமே பார்வையாய்” நதியா மொய்டு மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.
• ரிச்சர்ட் ஆண்டனி இயக்கிய “நிழல் தரும் இடம்” ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் நிர்மல் பிள்ளை நடித்துள்ளனர்.
• சூர்யா கிருஷ்ணா இயக்கிய "தி மாஸ்க்", சனந்த் மற்றும் திலிப் சுப்பராயன் நடித்துள்ளனர்.

அமேசாம் பிரைம் வீடியோ

அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இந்திய ஒரிஜினல்ஸ் தலைவர் அபர்ணா புரோஹித், “எங்கள் முதல் தொகுப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதில் நம்பிக்கை, அன்பு, பின்னடைவு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதநேயம் எவ்வாறு ஒன்றுபட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. புத்தம் புதுக் காலை விடியாதா தொடரை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், தமிழ்த் துறையில் இருந்து சுதந்திரமான  சினிமாக் குரல்கள் இடம்பெறுகின்றன, மேலும் இந்தத் தொடர் பார்வையாளர்களை நம்பிக்கையுடனும் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் என்று நம்புகிறோம்.

இணைப்பு: முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, Putham Pudhu Kaalai Vidiyaadhaa… துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி மற்றும் உத்வேகத்தைக் கொண்டாடும் மனம் மயக்கும் கதைகளுடன் பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.

Putham Pudhu Kaalai Vidiyaadhaa… ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான Mumbai Diaries, The Family Man, Comicstaan, Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur, The Forgotten Army – Azaadi Ke Liye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, மற்றும் Inside Edge ஆகியவைகளும், இந்தியத் திரைப்படங்களான Shershaah, Toofaan, Sherni, Coolie No. 1, Unpaused, Gulabo Sitabo, Durgamati, Chhalaang, Shakuntala Devi, Sarpatta Parambarai, Putham Pudhu Kaalai, Soorari Potru, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, Penguin, Nishabdham, Maara, V, CU Soon, Bheema Sena Nala Maharaja, Drishyam 2, Halal Love Story, Middle Class Melodies, Hello Charlie, Malik, மற்றும் Narappa ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Cinderella, Without Remorse, The Tomorrow War, Borat Subsequent Moviefilm, The Wheel Of Time, Tom Clancy's Jack Ryan, The Boys, Hunters, Cruel Summer, Fleabag, மற்றும் The Marvelous Mrs. Maisel. ஆகியவைகளும் உட்படும். இவையனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் இன்றி கிடைக்கப்பெறும். இச்சேவைகளில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் கிடைக்கும் உள்ளடக்கங்களும் அடங்கும்.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் Putham Pudhu Kaalai Vidiyaadhaa… ஐ எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், இலவசமாகப் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனில் பார்க்கலாம். பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், பிரைம் உறுப்பினர்களுக்கு, எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime இல் பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

பிரபல OTT- யில் பொங்கலுக்கு வெளியாகும் புதிய ஆந்தாலஜி திரைப்படம்! செம ட்ரீட் இருக்கு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Amazon Prime Video Announces Putham Pudhu Kaalai Vidiyaadhaa

People looking for online information on Aishu Lekshmi, Arjundas, Dhilipaction, Director mbalaji, Gourayy, GV Prakash, Halitha Shameem, Joju George, Jose lijomol, Madhumita, Musiq Surya, Pushkar Gayatri, Sananth Richard Anthony, Simply Nadiya, Teejay melody will find this news story useful.