பிரபல ஹீரோவின் மெகா-பட்ஜட் திரைப்படத்தை கைப்பற்றிய அமேசான்.. ரிலீஸ் ப்ளான் என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோவின் திரைப்பட டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படம் மூலம் அறிமுகமானவ இவர், பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கைதி திரைப்படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவர் தற்போது பொன்னியின் செல்வன், சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் குறித்து ஒரு செம தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட, பிறகு 30 நாட்கள் கழித்து அமேசானில் இப்படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

அண்மையில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த கார்த்தி, அவர் நடித்ததில் இதுவே அதிக பட்ஜட்டில் உருவாகும் திரைப்படம் என குறிப்பிட்டிருந்தார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்தி படத்தை வாங்கிய அமேசான் | Amazon prime gets this popular tamil actor's film rights

People looking for online information on Amazon Prime, Karthi, Rashmika Mandanna, Sultan will find this news story useful.