பேமிலி மேன் சீசன் 2 தமிழகத்தில் சலசலப்பை உருவாக்கியது. இதையடுத்து மூன்றாம் சீசன் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Also Read | ”நாம promise பண்ண மாதிரி…” நயன்தாராவுக்காக உருகிய விக்னேஷ் சிவன்… viral video!
ஓடிடி வருகைகளும் புதிய வடிவங்களும்…
சமீபகாலமாக ஓடிடி தளங்களின் படையெடுப்பால் வித்தியாசமான வடிவங்களில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டரை மணிநேரத்துக்குள் சொல்ல முடியாத உள்ளடக்கம் கொண்ட கதைகளை சீரிஸ் வகையில் பல அத்தியாயங்களாகவும், சீசன்களாகவும் உருவாக்கி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முன்பே பிரபலமாக இருந்த இந்த வகை வெப் சீரிஸ்கள், இப்போது இந்தியாவிலும் அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. முன்னணி ஓடிடி தளங்கள் தயாரித்த சேக்ரட் கேம்ஸ், மிர்சாபூர், பேமிலி மேன் மற்றும் தமிழில் விலங்கு உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன.
பேமிலி மேன் சீசன் 1…
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் முதலாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. உளவுத்துறை ரா அதிகாரி வேடத்தில் மையக் கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்தார். நாட்டின் பாதுகாப்புக்காக உளவு வேலைப் பார்க்கும் ரா அதிகாரியான மனோஜ் பாஜ்பாய் ஈடுபடும் மிஷன்களும், அவர் குடும்பத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் என இரண்டாகக் கதை சொல்லப்பட்டு இருந்தது. ஓடிடி தளங்களில் பல மொழிகளில் நேரடியாக வெளியான இந்த சீரிஸ் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இரண்டாவது சீசனும் சர்ச்சையும்…
முதல் சீசனுக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து அந்தத் தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியானது. இந்த சீசனில் குறிப்பிட்ட சில காட்சிகளில் தமிழர்களையும், சில போராட்டக் காரர்களையும் தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. தமிழகத்தில் இந்த சீரிஸுக்கு பலமான எதிர்ப்பு எழுந்தது. இந்த சீரிஸை தடை செய்யவேண்டுமெனவும் குரல்கள் எழுந்தன. இதில் நடித்திருந்த சமந்தாவுக்குக் கனடனங்களும் எழுந்தன. இந்த சர்ச்சைகளாலேயே அதிகளவில் இந்த சீசன் பார்க்கப்பட்டது.
மூன்றாவது சீசன்…
இதையடுத்து இப்போது இந்த சீரிஸின் மூன்றாவது பாகம் பற்றிய அறிவிப்பை தற்போது அமேசான் ப்ரைம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் இரு பாகங்களை உருவாக்கிய ராஜ் மற்றும் டி கே ஆகிய இருவருமே மூன்றாவது சீசனையும் உருவாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் அவர்கள் இருவரும் “வேலை நடந்து கொண்டு இருக்கிறது. பரபரப்பான சீசன் காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளனர். இரண்டாவது சீசனில் முடிவிலேயே அடுத்த சீசன் வட கிழக்கு மாநிலங்களில் நடக்கும் ஒரு மிஷனைப் பற்றி இருக்கும் என கூறும் விதமாக முடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8