‘ஆடை’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
செஞ்சுரி இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்வெஞ்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை அமலா பாலுடன் முன்னணி நடிகர் ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இப்படம் வரும் டிச.27ம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.