மாலத்தீவு கடற்கரையில் நடிகை அமலாபால்.. தீயாய் பரவும் சூப்பர் டூர் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலாபால் மாலத்தீவு கடற்கரையில் இருந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். பிரபு சாலமன் இயக்க விதார்த் மற்றும் தம்பி ராமையா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கிராமத்து கேரக்டரில் நடித்த அமலா பால் பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விஜய்யுடன் அமலா பால் 'தலைவா' படத்திலும், தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும், விக்ரமுடன் 'தெய்வத்திருமகள்' படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.

அமலா பால், அம்மா கணக்கு, ஆடை, Cadaver உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார். அமலாபால் சமீபத்தில் பாடகர் பவிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் அடுத்து அதோ அந்த பறவை போல போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் பிருத்திவிராஜ் உடன் உருவாகி கொண்டிருக்கும் 'ஆடுஜீவிதம்' படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில்  ரஞ்சிஷ் ஹி சாஹி (Ranjish Hi Sahi)என்ற வலைத் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul Vacation at Maldives viral Beach Photos

People looking for online information on Amala Paul, Maldives will find this news story useful.