THE TEACHER : தப்பு செய்தவர்களை தேடி பழி வாங்கும் அமலா பால் .. ஓடிடியில் வெளியான 'தி டீச்சர்' .!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது.

Advertising
>
Advertising

இயக்குநர் விவேக் இயக்கத்தில் தயாராகி மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் டிசம்பர் 23ஆம் தேதியன்று 'தி டீச்சர்' படம் வெளியானது.

நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், செம்பன் வினோத், கல்யாணி, மஞ்சு பிள்ளை, நந்து, மாலா பார்வதி, தினேஷ் பிரபாகர், கால்பந்தாட்ட வீரரும், நடிகருமான ஐ. எம். விஜயன், அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் 'தி டீச்சர்' படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ப்ருத்வி ராஜ் மற்றும் VTK பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில், பள்ளிக்கூடம் ஒன்றில் தேவிகா எனும் உடற்கல்வி ஆசிரியராக நடிகை அமலா பால் நடித்திருக்கிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இவர், தன்னை துன்புறுத்தியவர்களை தேடி கண்டறிந்து பழி வாங்குவதுதான் இப்படத்தின் திரைக்கதை. அமலா பாலின் அனுபவம் மிகுந்த முதிர்ச்சியான நடிப்பால் இப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. திரில்லர் ஜானரில் அமைந்திருப்பதால் இந்த படத்தின் திரைக்கதை, ரசிகர்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது.

இப்படத்தின் கதையை எழுதிய பி. ஜி. ஷாஜி குமார் மற்றும் இயக்குநர் விவேக்,  போதை பொருளை பயன்படுத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட  உடற்கல்வி ஆசிரியையான தேவிகா எனும் கதாபாத்திரம், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொள்வது போல் திரைக்கதையை அமைத்திருப்பது ரசிகர்களிடத்தில் கவனத்தை பெற்றிருக்கிறது.

அமலா பாலின் 'தி டீச்சர்' திரைப்படம், டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் மட்டுமல்லாமல், திரையுலக ஆர்வலர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul starrer Malayalam film The Teacher on Netflix

People looking for online information on Amala Paul, Netflix, The Teacher will find this news story useful.