நடிகை அமலா பால், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் நடித்து வெளியான மைனா திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தில் தனது எதார்த்தமான கதாபாத்திரத்தாலும் மற்றும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் அமலா பால் நிறைய வெகுமதிகளும் பெற்றார். இதனைத் தொடர்ந்து அமலா பால், தளபதி விஜய் நடித்த ‘தலைவா’ படத்திலும், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப் படத்திலும் நடித்தார்.
இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த அமலா பால், ‘அம்மா கணக்கு’, ‘ஆடை’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இந்த திரைப் படங்கள் பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப் படங்களாக அமைந்தன. இந்த திரைப் படங்களில் நடித்து புகழ் பெற்றதுடன் தென்னிந்திய மொழிகளில் பல படங்களிலும் துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அமலா பால் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் நடிகை அமலா பால், இரவு நேர பார்ட்டி ஒன்றில் ஈடுபட்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கையில் பாட்டிலுடன் மகிழ்ச்சியாக அமலா பால் நடனமாடும் இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால் என்பவருக்கு, அண்மையில் தான் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து நடந்த பேச்சுலர் பார்ட்டியில் தான் அமலா பால் கலந்து கொண்டு உற்சாகமாகி, நடனமும் ஆடியிருக்கிறார்.
அண்மையில் தான் தன்னுடைய சகோதரருக்கு திருமணமாகப் போவதை குறிப்பிட்டு தம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அமலாபால், தன்னுடைய கிரைம் பார்ட்னர், தன் தோழன், தன்னுடைய என்டர்டெயினர் என இருந்த தன்னுடைய தம்பி தற்போது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார். அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த பதிவில், “நம்ம கூடவே இருப்பவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்லும் பொழுது நமக்கு உண்டாகும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையே இல்லை” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் அமலாபால் தனது சகோதரர் திருமணத்தை ஒட்டி நடந்த இந்த பார்ட்டியில் ஜாலியாக டான்ஸ் ஆடி இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.