'சைலண்ட்டா' அமலா பால் நடித்துள்ள புதிய TIME LOOP 'வெப் சீரிஸ்'!! 'ஓடிடி' ரிலீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வெப் சீரிஸ்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த முறையே ஃபேமிலி மேன்-2, நவம்பர் ஸ்டோரி, லைவ் டெலிகாஸ்ட் உள்ளிட்ட  வெப் சீரிஸ்களில் நடித்திருந்தனர். இந்த சீரிஸ்கள் ப்ரைம் மற்றும் ஹாட் ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் ‘லூசியா’, ‘யு டர்ன்’ போன்ற விருது படங்களை இயக்கிய கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘குடி யெடமைதே’ எனும் வெப் சீரிஸில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.

இந்த சீரிஸில் அமலா பால் போலீஸ் அதிகாரி கதாபாத்திரமான ‘இன்ஸ்பெக்டர் துர்கா’வாகவும், ராகுல் விஜய் டெலிவரி பாயாகவும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸ் வரும் ஜூலை 16 ஆம் தேதி  ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் தமிழில்,  ‘அதோ அந்தப் பறவை போல’, ‘காடவர்’ உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’ படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.

ALSO READ: சரத்குமார் - ஜிப்ரான் இணையும் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்.. வேற லெவல் டைட்டில்! இயக்குநர் இவரா? Trending

தொடர்புடைய இணைப்புகள்

Amala Paul KudiYedamaithe web series in Aha OTT release date

People looking for online information on Aha, Amala Paul, KudiYedamaithe, OTT will find this news story useful.