ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிவித்த சஞ்சீவ், தங்கள் குழந்தைக்கு அய்லா செய்யத் (Ayla Syed) என்று பெயர் வைத்துள்ளதாக புகைப்படத்துடன் தகவல் சொன்னார்.
இந்நிலையில் இன்று (27/05/2020) ஆல்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு ஆல்யாவிற்கு நள்ளிரவு 12 மணிக்கு பாட்டு, டான்ஸ் என சர்ப்ரைஸ் கொடுத்தார் சஞ்சீவ் . சஞ்சீவ் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் ஆல்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கள் மகளின் ஃபோட்டோவை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அதன் படி அவர் தனது மகளின் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'இதோ எங்கள் குட்டி இளவரசி' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிரடியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.