நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.
இந்நிலையில் நடிகை ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அழகான போஸ் கொடுக்கும் தன் மகளின் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''இந்த நாளை இவள் நிறைவு செய்துவிட்டாள்'' என அன்புடன் பதிவிட்டுள்ளார். ஆல்யா வெளியிட்ட இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tags : Alya Manasa, Sanjeev, Alya Manasa Daughter