Also Read | "ரஜினி, கமலிடம் நிதி.. யார் பெயரும் கூடாது.. மொத்த பணத்தையும் நான் கொடுக்குறேன்".. கலங்கிய ராஜா.!
விஜய் டிவி ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் நடிகை ஆல்யா மானசா மற்றும் அவருடைய கணவர் நடிகர் சஞ்சீவ். இவர்கள் ஏர்போர்ட்டில் சண்டையிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வந்தது. பின்னர் இது குறித்து இவர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சஞ்சீவ். முன்னதாக குளிர் 100 டிகிரி என்கிற திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். சின்னத்திரையில் ஹிட் கொடுத்த ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசாவுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய கயல் திரைப்பட தொடரில் நடித்து வருகிறார்.
ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஞ்சீவ். மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமாக இருக்கும் இந்த தம்பதியர் இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தங்களுடைய நடப்பு நிகழ்வுகளை தெரிவித்தும் வருகின்றனர். இவர்களுக்கு ரசிகர்கள் எப்போதும் தங்களுடைய அன்பை கொடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். முன்னதாக ஆல்யா மானசா நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்தார். பின்னர் இரண்டாவது குழந்தை பிறப்புக்காக பிரேக் எடுத்த, ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் இனியா என்கிற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில்தான் இவர்கள் இருவரும் வெளியூர் செல்வதற்காக விமான டிக்கெட் வாங்கி, ஆனால் ஒன்பது மணி நேரமாகியும் விமானம் வரவில்லை என்பதால் ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். பின்னர் இது குறித்து இவர்களும், இவர்களுடன் சென்ற சக பயணிகளும் விமான நிறுவன ஊழியர்களிடம் கேள்வி கேட்டு, சண்டையிட்ட வீடியோ வைரலானது. மேலும் ஊழியர்கள் தங்களுடைய கடமையை முறையாக செய்யாமல் பொறுப்பற்ற முறையில் இருந்ததாக இவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுகுறித்த விளக்கத்தில், “நாங்கள் மலேசியாவிற்கு ஒரு நிகழ்விற்காக பயணிக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், எனவே நாங்கள் ஏர் ஏசியா விமானத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தோம். எங்கள் விமானம் டிசம்பர் 10 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தொடங்க வேண்டும். சூறாவளி காரணமாக மற்ற எல்லா விமானங்களும் சரியான நேரத்தில் தாமதமாகின. ஆனால் தட்பவெப்ப நிலை சீராகிவிட்டாலும் ஏறும் நேரத்திலிருந்து கிட்டத்தட்ட 8.45 மணிநேரம் தாமதமாக அறிவிக்கப்பட்டது. சில பயணிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறினார்கள். ஆனால், எந்த அதிகாரிகளும் எங்களுக்கு பதிலளிக்கவில்லை. ஏர்லைன்ஸில் நாங்கள் மிகவும் விரக்தியடைந்தோம் மற்றும் ஏமாற்றமடைந்தோம். எங்களுடன் இருந்த சில பயணிகள் இந்த மோசமான நடத்தை விமான நிறுவனங்களுடன் அடிக்கடி நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இது எங்கள் மலேசிய பயணத்தின் போது நடந்த சம்பவம்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read | “உன்ன பத்தி நிறைய சொல்றாங்களே.. சொல்றவங்க கதையெல்லாம் நம்பாதீங்க அண்ணா” - இளையராஜா..!