சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஆல்யா மானசா.. "ப்ரோமோவே சும்மா களை கட்டுதே"..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா அடுத்து சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளது பற்றி புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானசா. இதில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சஞ்சீவும் நடித்திருந்தார். இந்த சீரியலின் போது, இருவருக்கும் இடையே காதல் உருவான நிலையில், பின்பு அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு ஆல்யா மானசா, 'ராஜா ராணி 2' என்ற சீரியலிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி இருந்தார் ஆல்யா மானசா. முன்னதாக, சஞ்சீவ்- ஆல்யா மானசா தம்பதிகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது.

இதன் பின்னர், ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த போது ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் அந்த தொடரின் பாதியில் அவர் விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஆல்யாவுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பலரும் சஞ்சீவ் - ஆல்யா ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா, தனது குடும்பத்தினருடன் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். இணையத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்த அவர் பேசும் விஷயங்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இந்த நிலையில், மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் ஆல்யா மானசா. சன் டிவியில் அடுத்ததாக 'இனியா' என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். இது தொடர்பான ப்ரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதில், கிரிக்கெட் பேட்டுடன் திரும்பி நிற்கும் ஆல்யாவிடம் சில குழந்தைகள் கிரிக்கெட் பேட்டை தந்து விடும்படி கேட்கின்றனர்.

"அப்டின்னா என்ன பத்தி செமயா ஒரு பாட்டு பாடுங்க" என ஆல்யா மானசா கூற, குழந்தைகளுடன் ஆடி பாடும் ஆல்யா மானசா தொடர்பான ப்ரோமோ, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. அதே போல, நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலிலும் அவர் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதால் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
 

 

தொடர்புடைய இணைப்புகள்

Alya manasa new serial in sun tv named iniya promo released

People looking for online information on Alya Manasa, Iniya will find this news story useful.