ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் தசாவதாரத்தின் கதாபாத்திரங்கள் அடங்கிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அந்த இடுகையில், “இந்திய மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் !!! இதுதான் தசாவதாரத்தை பற்றிய சரியான ஒன்றாக இருக்கும்! இதுபோன்ற பிரமாண்டமான, புத்திசாலித்தனமான, மனதைக் கவரும் திரைக்கதையை யாராவது எப்படி யோசிக்க முடியும்? திரைப்படத் தயாரிப்பானது அதன் உண்மையான திறனைக் காண்பிக்கும் அளவுக்கு உருவாக்கப்படாத ஒரு காலம் ?? ஆனால் இதைச் செய்ய ஒரு விசாலமான கற்றல் அறிவுடன் ஒருவர் இருக்கிறார், அவர் இதைச் செய்தார் .. பெயர் கமல்ஹாசன். அவரது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுவது உலக நாயகன்.!” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
நடிகர் கமலின் தசாவதாரம் படம் உருவாகி வெளிவந்து 13 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இந்த இடுகை பகிரப்பட்டது. இதுபற்றி பேசியிருந்த கமல்ஹாசன், “தசாவதாரம் ஸ்கிரிப்ட் இயக்குவதற்கு பல இயக்குனர்களால் மறுக்கப்பட்டது, மேலும் எதிர்பாராத விதமாக திரு. ரவிக்குமார் அதில் குதித்தார்.
எல்டாம்ஸ் சாலையில் என்னுடன் ஒரு தொலைபேசி உரையாடலில் இருந்தபோது இந்த படத்தை தயாரிக்கும்படி கேட்டார். அப்படித்தான் இந்த படம் உருவானது! பெரும்பாலான நேரங்களில் நான் தனியாக வேலை செய்கிறேன், ஒரு திட்டத்தில் இருக்கும்போது மூத்தவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் கருத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். தசாவதாரத்தைப் பொறுத்தவரையிலும் இது மாறவில்லை. எனவே திரு. முக்தா சீனிவாசனின் கருத்தை எடுக்க விரும்பினேன்!” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு கமெண்ட் கொடுத்த பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், “கமல்ஹாசன் சர்... எங்களுக்காக மைக்கேல் மதன காம ராஜன் படத்தை எப்படி உருவாக்கினீர்கள் என எங்களுக்கு சொல்ல முடியுமா? தசாவதாரம் உங்கள் ஃபிலிம் மேக்கிங்கில் பிஎச்டி என்றால், மைக்கேல் மதன காம ராஜன் ஒரு டிகீரி கோர்ஸ் சார்” என குறிப்பிட்டுளளார்.
அண்மையில் தான் பிரேமம் படத்தின் காட்சிகளை பற்றி ரசிகர்களிடையே பேஸ்புக்கில் அல்போன்ஸ் புத்திரன் உரையாடினார்.
ALSO READ: யூடியூபில் ஆபாச பேச்சு.. பப்ஜி மதனின் சேனலை முடக்க போலீஸார் அதிரடி நடவடிக்கை! யார் இவர்?