இது தான் எனக்கு பிடிச்ச TOP 50 தமிழ் படங்கள்! LIST போட்ட அல்போன்ஸ் புத்திரன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்ரன் 2013ஆம் ஆண்டு வெளியான நேரம் படத்தின் மூலம் தமிழ் மலையாள ரசிகர்களின் விருப்பமான இயக்குனரானார்.

Advertising
>
Advertising

பிரேமம்

2 வருடங்கள் கழித்து வெளியான பிரேமம் (2015) தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர் திரையுலகில் நுழைந்து 8 வருடங்களே ஆன நிலையிலும் அவர் இரண்டு படங்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களிலேயே பரவலான சினிமா ரசிகர்களின் விருப்ப இயக்குனராக உள்ளார்.

TOP 50

அல்போன்ஸ் புத்ரன் 2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் தனக்குப் பிடித்த 50 தமிழ் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் பகிர்ந்துள்ள இந்த முகநூல் பதிவு தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அல்போன்ஸ் புத்திரனின் பட்டியலில் முத்லிடத்தை தளபதி படம் பிடித்துள்ளது. 

டாப் 50 தமிழ் படங்களின் பட்டியல் இது தான்!

Thalapathy 
Apoorva Sagotharargal
Johny
Mullum Malarum
Annamalai
Devar Magan
Pollathavan
Kaakka Kaakka
Agni Natchathiram
Michael Madana Kama Rajan
Avai Shanmughi
Thullaatha Manavum Thullum
Aasai
Attahasam
Kadhal Konden
Kaadhalan
Indian
Mudhalvan
Vaali
Kushi
Sachein
Pokkiri
Chennai 28
Aaranyakandam
Vetri Vizha 
Manmadhan
Autograph
Devathaye Kanden
Kanaa Kanden
Vada Chennai
Mouna Guru
Paruththi Veeran
Singam
Vel
Aayitha Ezhuththu
Kaththi
Maanagaram
Kuruthipunal
Naayagan
Anjaathe
Sathya
Baasha
Mouna Raagam
Alaipayuthey
Mankatha
Guna
Yudhdham Sei
Ullaththe Alliththa
Anbe Sivam
Iruvar

GOLD 

ஏற்கனவே தனக்குப் பிடித்த டாப் 20 ஹாலிவுட் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன். அதே போல் டாப் 50 மலையாள படங்களையும் பதிவிட்டு இருந்தார். அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Posted his Top 50 Tamil Movies Of All Time List

People looking for online information on All Time Best Tamil Movies, Alphonse Puthren, Neram, Premam, Tamil Movies of All Time, Top 50 Tamil Movies, Top 50 Tamil Movies of All Time will find this news story useful.