அட்ராசக்க..! பிரேமம் இயக்குநரின் அடுத்த படம் 'GOLD'.. OFFICIAL ரிலீஸ் தேதி வந்தாச்சு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் தயாராகி வரும் கோல்டு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நாக சைதன்யாவின் புதிய படத்தின் போஸ்டர் டிசைனர் இவரா? வைரலாகும் வெங்கட் பிரபு 'டச்'!

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

இதனைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தையும் அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.

பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கோல்டு திரைப்படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடித்துள்ளார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், இந்த திரைப்படம் ஓணம் விருந்தாக கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி திரை அரங்கில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பட வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தாமதமானது. இதன் பின்னர், தொடர்ந்து படம் தாமாதமாகி வந்ததால் ரசிகர்கள் பலரும் கோல்டு பிடத்தின் ரிலீஸ் எப்போது என்றும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், கோல்டு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,, டிசம்பர் 1 ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேமம் படம், தென் இந்திய அளவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருந்த திரைப்படம் என்பதால், தற்போது கோல்டு ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Also Read | வாரிசு படத்தின் முக்கிய 3 ஏரியா உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்..!!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse puthren next gold release date officially announced

People looking for online information on Alphonse Putharen, Gold, Gold Movie, GOLD Movie Release Update will find this news story useful.