இதான் மாஸ்.. பிரித்விராஜ் & நயன்தாரா நடிக்கும் 'GOLD'.. ரிலீஸ் எப்போ? இயக்குனர் கொடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொச்சி: கோல்ட் படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார்.

Alphonse Puthren Nayanthara Gold Movie Release Day Onam
Advertising
>
Advertising

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகளான எடிட்டிங், போஸ்டர் டிசைன், இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Gold படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அல்போன்ஸ் சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இந்த போஸ்டர் முழுக்க, பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகளும் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் கோல்ட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.‌அதன்படி கோல்ட் படம் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்துள்ளார். "கோல்ட் ஓணத்துக்கு உருகும்" என கூறியுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Nayanthara Gold Movie Release Day Onam

People looking for online information on Alphonse Puthren, Gold, Nayanthara, Onam will find this news story useful.