"பிரேமம்" அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் 'GOLD'.. வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: 'கோல்ட்' படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ADMK பொள்ளாச்சி நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்தை தொடர்ந்து  கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படம் திரில்லர் வகைமையில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை  நடிகர் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

Gold படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

கோல்ட் படம் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஓணம் திருநாளை முன்னிட்டு தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் சமத் தனது ட்ரூத் க்ளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கைப்பற்றி உள்ளார். இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நெட்வொர்க்கின் சூர்யா & சன் டிவி தொலைக்காட்சி சேனல்கள் கைப்பற்றி உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன்  40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

Also Read | போடு வெடிய.. பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "விக்ரம் Hitlist".. எப்போ? எதுல?

Alphonse Puthren Gold Overseas Rights Bagged by Truth Global Films

People looking for online information on Alphonse Putharen, Alphonse Puthren Gold Movie, Truth Global Films will find this news story useful.