அல்போன்ஸ் புத்திரனின் 'GOLD'.. படம் இப்படி தான் இருக்கும்..சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எர்ணாகுளம்: 'கோல்டு' படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், பிரேமம் படத்தை தொடர்ந்து  கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை  நடிகர் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து தயாரித்துள்ளார். பிரித்விராஜூக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் கோயம்புத்தூர் ஏரியா வினியோகஸ்தரான SSI புரொடக்ஷன்ஸ் சுப்பையா கைப்பற்றி உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநாடு படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் சமத் தனது ட்ரூத் க்ளோபல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கைப்பற்றி உள்ளார்.

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல சன் டிவி நெட்வொர்க்கின் சூர்யா & சன் டிவி தொலைக்காட்சி சேனல்கள் கைப்பற்றி உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன்  40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் 29 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஜானர் Edge of The Seat Thriller என சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren Gold Movie Censor Certificate and Genre

People looking for online information on Alphonse Puthren, CBFC, Gold, Nayanthara, Prithvi Raj will find this news story useful.