"சேட்டா ரிலீஸ் தேதி..?".. GOLD அப்டேட் கேட்ட ரசிகர்.. தன் ஸ்டைலில் பிரேமம் இயக்குநர் அளித்த பதில்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேரம்', 'பிரேமம்' உள்ளிட்ட இரண்டே படங்களை இயக்கியதன் மூலம் மலையாளம், தமிழ் திரை உலகை தாண்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் அல்போன்ஸ் புத்ரன்.

Advertising
>
Advertising

Also Read | தஞ்சைக்கு அழைத்த ”ஆதித்த கரிகாலன்” விக்ரம்... "வந்தியத்தேவன்" கார்த்தியின் வைரல் Request.‌!

இதில், பிரேமம் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது 'கோல்டு' என்னும் திரைப்படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு  பணிகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் நாயகனாக நடித்துள்ளதுடன் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடித்துள்ளார். இவர்களுடன் 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்துள்ளனர்.

கோல்டு படத்தின் டீசர் பல மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில், ஓண தினத்தன்று திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் என்றும் அல்போன்ஸ் புத்ரன் அறிவித்திருந்தார். இதன் பின்னர், படத்தின் தயாரிப்பு பணிகள் இன்னும் இருப்பதால், பட ரிலீஸ் தாமதமாக இருக்கும் என்றும் அல்போன்ஸ் புத்ரன் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஓணமும் கடந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் கோல்டு ரிலீஸ் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது வருகின்றனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்ரன் பேஸ்புக் பதிவில் ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பி இருந்த நிலையில், இதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் இயக்குனர்.

இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்ரன், "இன்னும் கொஞ்சம் வேலைகள் மீதம் உள்ளது ப்ரோ. கொஞ்சம் CG, கொஞ்சம் மியூசிக், கொஞ்சம் கலரிங் என பணிகள் மீதி இருக்கிறது. அது முடிவடைந்ததும் படத்தினுடைய ரிலீஸ் தேதியை நானே தெரிவிக்கிறேன். அதுவரை ஒன்று பொறுத்துக் கொள்ளுங்கள். திரையரங்குகளில் இருந்து ஓண தேதிக்கு ரிலீஸ் செய்ய தான் அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் வேலை முடியவில்லை. வேகாத உணவு யாருக்கும் பிடிக்காது. இதனால் நல்ல வகையில் உணவு வெந்து வைக்கப்பட்ட பிறகு, அதனை தரலாம் என Cook நான் தீர்மானித்தேன். ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு ரிலீஸ் செய்யாமல் போனதற்கு மன்னிக்கவும்" என தனது விளக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன் கூறி உள்ளார்.

Also Read | "என் அப்பா மாதிரி யாருக்கும்".. நிகழ்ச்சியில் Emotional ஆன Viral சிறுமி.. Exclusive!!

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse puthren about gold release date in comments

People looking for online information on Alphonse Puthren, Gold, Gold Movie Release Updates will find this news story useful.