PUSHPA THE RULE: அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா PART 2.. போட்டோக்களுடன் வெளியிட்ட செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இந்தியா டிரெண்ட்டில் முதலிடம்.. மாஸ் காட்டும் ஜெயிலர் FIRST LOOK போஸ்டரை டிசைன் பண்ணது இவரா? செம

பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது.  இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டனர். பூஜை புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIDEO: ஆர்யா நடிக்கும் Sci-fi ஆக்சன் திரைப்படம் 'கேப்டன்'.. வெளியான மிரட்டலான டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa The Rule Pooja Stills

People looking for online information on Allu Arjun, Pushpa movie, Pushpa The Rule, Pushpa The Rule Pooja Stills will find this news story useful.