PUSHPA : ரஷ்ய மொழியில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா பாகம் -1’.. வெளியான டிரெய்லர்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது.

Advertising
>
Advertising

கடந்த டிசம்பர் 17 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தது. 'புஷ்பா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் நடித்தனர். இந்த படத்தை சுகுமார் இயக்கினார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்தார்.

படத்தில் மற்றுமொரு மிரளவைக்கும் கேரக்டரில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்தில் இது வரை அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இறுதியாக 300 கோடி ரூபாய் இந்த படம் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா: தி ரூல் படமும் அடுத்து தயாராகி வருகிறது.

இந்நிலையில் பல மொழிகளில் வெளியான முதல் நாளில் இருந்து  பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சாதனைப் படைத்து வந்த புஷபா திரைப்படம் எல்லைத் தாண்டிய ரசிகர்களைக் கவர்ந்து தற்போது ரஷ்ய சினிமா சந்தையில் வருகிற டிசம்பர் மாதம் 8ம் தேதி வெளியாக இருக்கிறது.  இப்படத்தின் சிறப்பு திரையிடல் காட்சிகள் டிசம்பர் 1-ஆம் தேதி மாஸ்கோவிலும், டிசம்பர் 3-ஆம் தேதி பீட்டர்ஸ்பெர்கிலும் திரையிடப்படுகின்றன.

ஆம், ‘புஷ்பா- தி ரைஸ்’ திரைப்படம் ரஷ்யாவில் தற்போது பிரம்மாண்டமான வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. பல மொழிகளில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் ட்ரைய்லர் தற்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகி உள்ளது.  இது தொடர்பான நிகழ்வுகளில் அல்லு அர்ஜூன் கலந்துகொண்ட ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Allu Arjun Pushpa The Rise Russian language trailer

People looking for online information on Allu Arjun Pushpa The Rise, Pushpa, Russian Pushpa will find this news story useful.