செம்மரக்கடத்தல் பற்றிய 'புஷ்பா' திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா'.

allu arjun pushpa the rise release date announced

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

allu arjun pushpa the rise release date announced

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் முதல் சிங்கிள் ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இப்போது, ​​தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன் படி முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு (25.12.2021) வெளியாகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Allu arjun pushpa the rise release date announced

People looking for online information on Allu Arjun, Fahad Fazil will find this news story useful.