'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புஷ்பா
சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது.
புஷ்பா வசூல் மழை
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.
முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
புஷ்பா வசூல் சாதனை
இந்நிலையில் புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.