அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிக்கும் PAN INDIA புஷ்பா திரைப்படத்தின் SECOND SINGLE! ராஷ்மிகாவின் புதிய STILLS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா'.

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசை முன்கூட்டியே வெளியிட படக்குழு முடிவு செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் அக்டோபர் 13 இன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு மொழிகளில் சித் ஸ்ரீ ராம் குரலில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ஸ்ரீவள்ளி பாடல் வெளியாகியுள்ளது. 

 

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா நடிக்கும் PAN INDIA புஷ்பா திரைப்படத்தின் SECOND SINGLE! ராஷ்மிகாவின் புதிய STILLS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Allu arjun pushpa movie latest second single sri valli

People looking for online information on Allu Arjun, Rashmika Mandanna will find this news story useful.